சத்தமில்லாமல் சாதிக்கும் விப்ரோ அசிம் பிரேம்ஜி-யின் இளைய மகன் தாரிக் பிரேம்ஜி..!!
இந்தியாவின் பல வெற்றிகரமான தொழிலதிபர்கள் மல்டி பில்லியன் டாலர் கம்பெனிகளை நிறுவியுள்ளனர். அந்த தொழில் சாம்ராஜ்ஜியங்களை அவர்களது சந்ததியினர் தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் முக்கியமான பணிகளை செய்து வருகின்றனர்.அப்படிப்பட்ட ஒருவர்தான் தாரிக் பிரேம்ஜி.
விப்ரோ நிறுவனரும் இந்திய தொழிலதிபருமான அசிம் பிரேம்ஜியின் இளைய மகன். விப்ரோ எண்டர்பிரைசின் நான் எக்ஸிகியூட்டிவ் டைரக்டராக தாரிக் உள்ளார். ஐடி சேவை பிரிவான விப்ரோ-வின் நிர்வாக தலைவராக இருக்கும் அசிம் பிரேம்ஜி-யை எல்லோருக்கும் தெரிந்திருக்கும் வேளையில் இளைய வாரிசான தாரிக் பிரேம்ஜி குறித்து பலருக்கும் தெரியாது.
சொல்லப்போனால் அசிம் பிரேம்ஜி-க்கு இளைய மகன் இருப்பதே பலருக்கும் தெரியா.விப்ரோ சாம்ராஜ்ஜியத்தில் விப்ரோ கன்ஸ்யூமர் கேர் அண்டு லைட்டிங் மற்றும் விப்ரோ இன்ப்ராஸ்ட்ரக்சர் இஞ்சினியரிங் ஆகிய நிறுவனங்களை தாரிக் கவனித்து வருகிறார். விப்ரோ நிறுவனத்தின் ரூ.
2,00,000 கோடி சந்தையை விப்ரோ எண்டர்பிரைசஸ் நிர்வகித்து வருகிறது.பெங்களூர் பல்கலைக்கழகத்தின் செயின்ட் ஜோசப் காலேஜில் காமர்ஸ் டிகிரியை தாரிக் முடித்துள்ளார். பட்டப்படிப்புக்குப் பின்னர் அவர் ஒரு பிபிஓ நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். அதைத் தொடர்ந்து அவர் பிரேம்ஜி இன்வெஸ்ட்டில் வேலைக்கு சேர்ந்தார்.
விப்ரோ நிறுவனத்தின் அசிம் பிரேம்ஜி பிலந்தோபிக் இனிஷியேடிவ்ஸ் மற்றும் அசிம் பிரேம்ஜி பவுண்டேஷன் ஆகிய இரண்டு அறக்கட்டளைகளின் போர்டில் தாரிக் உறுப்பினராக 2016 ஆம் ஆண்டில் சேர்ந்தார்.அசிம் பிரேம்ஜி தனது அறச்செயல் முயற்சிகளுக்கு நிதியளிப்பதற்காக நிறுவிய அசிம் பிரேம்ஜி எண்டோவ்மென்ட் ஃபண்டின் துணைத் தலைவராகவும் உள்ளார்.
நிறுவனக் குழு உறுப்பினராக, இந்த நிதியின் முதலீட்டு செயல்முறையை அமைப்பதிலும் நிறுவனமயமாக்குவதிலும் தாரிக் பிரேம்ஜி முக்கிய பங்கு வகித்துள்ளார்.அசிம் பிரேம்ஜி ஒரு சிறிய, தனது குடும்பத்துக்கு சொந்தமான சமையல் எண்ணெய் நிறுவனத்தை விப்ரோ லிமிடெட் ஆக மாற்றினார்.
இது தொழில்நுட்ப அவுட்சோர்சிங் சேவைகளை வழங்குவதில் கவனம் செலுத்தும் பன்னாட்டு நிறுவனமாகும். அசிம் பிரேம்ஜிக்கு ரிஷாத், தாரிக் என இரு மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் ரிஷாத்தைப் போலல்லாமல், விப்ரோ தலைவர் அசிம் பிரேம்ஜியின் இளைய மகன் தாரிக் பொதுவெளியில் வருவதையும், செய்திகளை சந்திப்பதையும் விருப்பம் இல்லாமல் உள்ளார். டிமார்ட் ராஜாகிஷன் தமனியும் கிட்டத்தட்ட இதேபோல தான்.
தாரிக் பிரேம்ஜி, விப்ரோ எண்டர்பிரைசஸ் குழுவில் நியமிக்கப்பட்டுள்ளார், இந்த நிறுவனம் சந்தூர் போன்ற சோப்புகளை தயாரிக்கிறது. அத்துடன் ஏர்பஸ், போயிங் போன்ற விமான உற்பத்தியாளர்களுக்கு விண்வெளி துணை அமைப்புகளை உருவாக்கும் 1.23 பில்லியன் டாலர் தனியார் ஐடி அல்லாத வணிக நிறுவனமாகும்.
விப்ரோ எண்டர்பிரைசஸ், இந்தியா, தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு ஆசியாவில் வலுவான நுகர்வோர் பராமரிப்பு மற்றும் லைட்டிங் வணிகத்தை நடத்துகிறது.சந்தூர்,