டாடா நிறுவனம் இப்படி செய்யும்னு கனவுல கூட நெனச்சு பாக்கல… அதிர்ச்சியில் உறைந்த இந்திய வாடிக்கையாளர்கள்…

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் கார்கள் மீது இந்திய வாடிக்கையாளர்கள் பலரும் மிகப்பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் கார்களை வாங்க பலரும் போட்டி போட்டு கொண்டுள்ளனர்.

இதில் நீங்களும் ஒருவர் என்றால், உங்களுக்கு அதிர்ச்சிகரமான செய்தி ஒன்று காத்து கொண்டுள்ளது. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அனைத்து கார்களின் விலையும் அதிரடியாக உயரவுள்ளது. இந்த விலை உயர்வானது, வரும் பிப்ரவரி 1ம் தேதியில் இருந்து அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களின் விலை சராசரியாக 0.7 சதவீதம் உயரவுள்ளது. கார்களின் உற்பத்தி செலவுகள் அதிகரித்து வருவதன் காரணமாகவே, விலையை உயர்த்தவுள்ளதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தற்போதைய நிலையில் மொத்தம் 11 கார்களை விற்பனை செய்து வருகிறது.

இதில் ஐசி இன்ஜின் கார்களின் எண்ணிக்கை 7 ஆகும். அவை டாடா டியாகோ (Tata Tiago), டாடா டிகோர் (Tata Tigor), டாடா பன்ச் (Tata Punch), டாடா அல்ட்ராஸ் (Tata Altroz), டாடா நெக்ஸான் (Tata Nexon), டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகியவை ஆகும்.

அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் விற்பனை செய்யும் எலெக்ட்ரிக் கார்களின் எண்ணிக்கை 4-ஆக உள்ளது. அவை டாடா டியாகோ இவி (Tata Tiago EV), டாடா டிகோர் இவி (Tata Tigor EV), டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) மற்றும் டாடா பன்ச் இவி (Tata Punch EV) ஆகும்.

இதில், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரானது, வெகு சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் ஆரம்ப விலை 10.99 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது எக்ஸ் ஷோரூம் விலை ஆகும். டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் மொத்தம் 5 வேரியண்ட்களில் விற்பனைக்கு கிடைக்கும்.

வரும் காலங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் பல்வேறு எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இதில், டாடா அல்ட்ராஸ் இவி (Tata Altroz EV) எலெக்ட்ரிக் கார் முக்கியமான ஒன்றாகும். இந்த எலெக்ட்ரிக் கார் வரும் 2025ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

 

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *