பைக் மாதிரி மைலேஜ் தரும் டாடா காரின் விலை இவ்ளோதானா! எவ்ளோனு தெரிஞ்சா இப்பவே ஷோரூமுக்கு கௌம்பீருவீங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இது மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter) உள்ளிட்ட கார்களுடன், டாடா பன்ச் போட்டியிட்டு வருகிறது.
கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான், டாடா பன்ச் கார் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது டாடா பன்ச் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 2 வருடங்கள் மட்டுமே ஆகிறது. சரியாக சொல்வதென்றால், சுமார் 26 மாதங்கள் மட்டுமே கடந்துள்ளன.
அதற்குள்ளாக உற்பத்தியில் மிகப்பெரிய மைல்கல் (Milestone) ஒன்றை டாடா பன்ச் கார் தற்போது கடந்துள்ளது. 3 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்பதுதான் அந்த பிரம்மாண்டமான மைல்கல் ஆகும். விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 26 மாதங்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், 3 லட்சம் டாடா பன்ச் கார்கள் உற்பத்தி செய்யப்பட்டிருப்பது உண்மையிலேயே மிகப்பெரிய விஷயம்தான்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டாடா பன்ச் காரின் ஆரம்ப விலை வெறும் 6 லட்ச ரூபாய் மட்டுமே. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 10.10 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.
செயல்திறனை பொறுத்தவரையில் பெட்ரோல் (Petrol) மற்றும் சிஎன்ஜி (CNG) இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் பெட்ரோல் வெர்ஷன்களில் பொருத்தப்பட்டிருப்பது 1.2 லிட்டர் 3 சிலிண்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் இன்ஜின் ஆகும். இதன் பவர் அவுட்புட் 85 பிஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் ஆகும்.
இந்த இன்ஜின் உடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன் சிஎன்ஜி வெர்ஷன்களிலும் இதே இன்ஜின்தான் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இதன் பவர் அவுட் 73 பிஹெச்பி மற்றும் 103 என்எம் ஆக குறைந்து விடும். அதேபோல் சிஎன்ஜி வெர்ஷன்களில் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும்தான் வழங்கப்பட்டுள்ளது.
இருப்பினும் டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன்கள் சிறப்பான மைலேஜ் (Mileage) வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டாடா பன்ச் காரின் சிஎன்ஜி வெர்ஷன்கள் ஒரு கிலோவிற்கு 26.99 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பெட்ரோல் வெர்ஷன்கள் இவ்வளவு அதிகமான மைலேஜை வழங்காது.