டாடா குழுமத்தின் அடுத்த IPO, அதுவும் இந்த நிறுவனமா..!! எதிர்பார்க்காத டிவிஸ்ட்..!
இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தகச் சாம்ராஜ்ஜியமாக இருக்கும் டாடா குழுமம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் எலக்ட்ரிக் -வாகனத் துறைகளில் தொடர்ந்து தனது வர்த்தகம் மற்றும் சேவைகளை விரிவாக்கம் செய்து வருவதால், இதைப் பணமாக்கிக்கொள்ளும் முயற்சியில் இறங்கியுள்ளது.
சமீபத்தில் டாடா குழுமத்தின் டாடா டெக்னாலஜி ஐபிஓ முதலீட்டாளர்களுக்குப் பெரிய அளவிலான லாபத்தைக் கொடுத்தது.
இந்த ஐபிஓ வெற்றிக்குப் பின்பு தான் இந்திய ஐபிஓ சந்தை மீண்டும் களைகட்ட துவங்கியது. இப்படியிருக்கும் சூழ்நிலையில் அடுத்த ஐபிஓ வெளியிட டாடா குழுமம் தயாராகியுள்ளது. டாடா குழுமம் அதன் பேட்டரி வணிகத்தைத் தனியாகப் பிரித்து ஐபிஓ வெளியிடத் திட்டமிட்டு உள்ளதாகவும், இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்யத் துவங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
டாடா நிறுவனம், அக்ரடாஸ் எனர்ஜி ஸ்டோரேஜ் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை ஒரு தனி யூனிட்டாகப் பிரிப்பது பற்றிய ஆரம்பக் கட்ட ஆலோசனையில் உள்ளது. தனியாகப் பிரிப்பது மூலம் பேட்டரி வணிகத்திஸ் தனிப்பட்ட முறையில் முதலீட்டை திரட்டுவது எளிதாகும். இதேபோல் மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடுவது எளிதாகும்Agratas Energy Storage Solutions நிறுவனத்தின் வளர்ச்சி மற்றும் சந்தை சூழ்நிலைகள் பொறுத்து 5 பில்லியன் டாலர் முதல் 10 பில்லியன் டாலர் தொகைக்கு மதிப்பிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.