போட்டி நிறுவனங்களின் ஈரக்குலையை நடுங்க வைத்த டாடா! தரமான சம்பவத்திற்கு முழுசா ரெடி ஆயிட்டாங்க!
டாடா பாசஞ்சர் எலெக்ட்ரிக் மொபிலிட்டி (Tata Passenger Electric Mobility – TPEM) நிறுவனம், அடுத்த 18 மாதங்களில், 5 புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இந்த 5 எலெக்ட்ரிக் கார்களும், ‘acti.ev’ பிளாட்பார்ம் (Platform) அடிப்படையில் கட்டமைக்கப்படவுள்ளன.
இது ஒரு மேம்பட்ட எலெக்ட்ரிக் வாகன பிளாட்பார்ம் ஆகும். டாடா பன்ச் இவி (Tata Punch EV) எலெக்ட்ரிக் கார்தான், இந்த பிளாட்பார்ம் அடிப்படையில் விற்பனைக்கு வரவுள்ள முதல் தயாரிப்பு ஆகும். டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் ஏற்கனவே பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விட்டது.
அத்துடன் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகளும் தொடங்கப்பட்டு விட்டன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 21 ஆயிரம் ரூபாயை முன்பணமாக (Downpayment) செலுத்தி, டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரை தற்போது முன்பதிவு செய்து கொள்ளலாம்.
டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் நடப்பு ஜனவரி மாத இறுதிக்குள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்போது இதன் விலை (Price) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். இதை தொடர்ந்து ‘acti.ev’ பிளாட்பார்ம் அடிப்படையில் மேலும் 4 புதிய எலெக்ட்ரிக் கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு களமிறக்கப்படும்.
அதற்கு பின் மேலும் பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களில், இந்த பிளாட்பார்ம் பயன்படுத்தப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ‘acti.ev’ பிளாட்பார்ம் அடிப்படையில் விற்பனைக்கு வரவுள்ள எலெக்ட்ரிக் கார்களின் டிரைவிங் ரேஞ்ச் (Driving Range) 300 கிலோ மீட்டர் முதல் 600 கிலோ மீட்டர் வரை இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த பிளாட்பார்ம் அடிப்படையில், ஃப்ரண்ட் வீல் டிரைவ், ரியர் வீல் டிரைவ் மற்றும் ஆல் வீல் டிரைவ் வாகனங்களை தயாரிக்க முடியும். அத்துடன் இந்த பிளாட்பார்ம் அடிப்படையில் உருவாக்கப்படும் எலெக்ட்ரிக் கார்கள், AC ஃபாஸ்ட் சார்ஜிங் மற்றும் DC ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கு சப்போர்ட் ஆகும்.
இதன் மூலம் சுமார் 100 கிலோ மீட்டர் பயணிக்க தேவையான சார்ஜை, வெறும் 10 நிமிடங்களில் நிரப்பி கொள்ள முடியும். இது போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் காரணமாக ‘acti.ev’ பிளாட்பார்ம் அடிப்படையில் விற்பனைக்கு வரவுள்ள டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள், இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.