தமிழ்நாட்டில் மாறி மாறி முதலீடு செய்யும் டாடா.. ரூ.56000 கோடி, 2 மெகா அறிவிப்பு.. வாவ்..!

மிழ்நாட்டு முதலீட்டாளர் மாநாட்டின் 2வது நாள் கூட்டத்தில் டாடா குழுமம் அடுத்தடுத்து 2 இன்ப அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
முதல் நாள் கூட்டத்தில் டாடா எலக்ட்ரானிக்ஸ் ஓசூரில் உள்ள தனது மாபெரும் ஐபோன் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தி தொழிற்சாலையில் 12,082 கோடி ரூபாய் முதலீட்டில் விரிவாக்கத் திட்டங்களைச் செய்யத் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இதைத் தொடர்ந்து 2வது நாள் கூட்டத்தில் டாடா பவர் மற்றும் டைட்டன் ஆகிய இரு நிறுவனங்கள் மெகா முதலீட்டுத் திட்டத்தை அறிவித்துள்ளது. டாடா பவர் முதலீடு: தமிழகத்தில் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் 10 ஜிகாவாட் (GW) திறன் கொண்ட சோலார் மற்றும் காற்றாலை அமைப்புகளை நிறுவ சுமார் 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக டாடா பவர் உயர் அதிகாரி செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறினார். இதற்கான ஒப்பந்தம் சென்னையில் நடக்கும் தமிழ்நாடு உலகளாவிய முதலீட்டாளர்கள் மாநாட்டின் 2வது நாள் கூட்டத்தில் கையெழுத்தாகும்.இதுகுறித்து டாடா பவர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரவீர் சின்ஹா கூறுகையில் TNGIM கூட்டத்தின் ஒரு பகுதியாக நாங்கள் ரூ.70,000 கோடி முதலீடு செய்ய உள்ளோம், இந்த முதலீடு அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் நடக்கும். தமிழகத்தில் 10 ஜிகாவாட் சோலார் மற்றும் காற்றாலை திட்டத்தை அமைக்க உள்ளோம் என்று தெரிவித்தார். டாடா பவர் ஏற்கனவே தெற்கு மற்றும் மத்திய தமிழகப் பகுதிகளில் ரூ.15,000 கோடி முதலீட்டில் பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளன, சில திட்டங்கள் கட்டுமானத்தில் உள்ளது. இந்த நிலையில் புதிய முதலீடுகள் சுமார் ரூ.55,000 கோடி செய்ய உள்ளதன் மூலம் 70000 கோடி ரூபாயை மொத்தமாக டாடா பவர் தமிழ்நாட்டில் முதலீடு செய்கிறது எனப் பிரவீர் சின்ஹா தெரிவித்தார். ஓசூர் டைட்டன் இன்ஜினியரிங்: டாடா குழுமத்தின் டைட்டன் நிறுவனத்தின் சொந்த துணை நிறுவனமான டைட்டன் இன்ஜினியரிங் & ஆட்டோமேஷன் லிமிடெட் (TEAL) ஓசூரில் 430 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இதற்காக ஒப்பந்தம் தமிழ்நாடு சர்வதேச முதலீட்டாளர்கள் கூட்டத்தில் தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுகிறது. இதில் 200 கோடி ரூபாயை செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யச் சிலிக்கான் வேஃபர் டேப் உபகரணங்களை உற்பத்தி செய்யும் வசதிக்காகச் செய்யப்படும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *