வாடிக்கையார்களின் நீண்ட நாள் கனவை நினைவாக்கிய டாடா மோட்டார்ஸ்… 2 புதிய மாடல்கள் அறிமுகம்
கடந்த சில ஆண்டுகளாக சிஎன்ஜி கார்கள் பிரபலமாக உள்ளன. CNG கார்களின் லேட்டஸ்ட் வெர்ஷன்கள் முந்தைய வெர்ஷன்களுடன் ஒப்பிடும்போது பல அம்சங்களுடன் அறிமுகமாகி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகின்றன. இந்த நிலையில் உள்நாட்டு வாகன தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் தனது டியாகோ மற்றும் டிகோர் மாடல்களின் CNG AMT வேரியன்ட்ஸ்களை அறிமுகப்படுத்தியது. இதன் மூலம் இந்தியாவில் AMT அதாவது ஆட்டோமேட்டிக் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் அறிமுகமாகி இருக்கும் முதல் 2 கார்களாக டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி ஏஎம்டி கார்கள் உள்ளன. CNG கார்களில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கிடைக்குமா என்று எதிர்பார்த்து பல வாடிக்கையாளர்கள் காத்திருந்த நிலையில், இந்த எதிர்பார்ப்பை தற்போது பூர்த்தி செய்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.
இதில் Tiago CNG AMT-யின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.7,89,900-ஆகவும், Tigor CNG AMT-யின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.8,84,900-ஆகவும் உள்ளது. இவற்றின் மைலேஜ் 28.06 கிமீ/கிலோ ஆகும். இந்த 2 கார்களிலும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் உள்ளது. இது பெட்ரோல் மோட்-ல் 86PS பவர் மற்றும் 113Nm பீக் டார்க்கையும் CNG மோட்-ல் 73.4PS பவர் மற்றும் 95Nm பீக் டார்க்கையும் உருவாக்குகிறது. அதே போல பெட்ரோல் மற்றும் சிஎன்ஜி ஆகிய 2 வெர்ஷன்களிலும் இப்போது 5-ஸ்பீட் எம்டி மற்றும் 5-ஸ்பீட் ஏஎம்டி ஆப்ஷன்கள் உள்ளன. மேலும் 2 கார்களுமே ட்வின்-சிலிண்டர் டெக்னலாஜியை கொண்டு பூட் ஸ்பேஸை சேமிக்க உதவுகின்றன.
வேரியன்ட் வாரியாக Tiago CNG AMT எக்ஸ்-ஷோரூம் விலைகள் :
Tiago CNG AMT-ஆனது XTA, XZA+, XZA+ DTமற்றும் XZA NRG ஆகிய 4 வேரியன்ட்ஸ்களில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.7,89,900, ரூ.8,79,900, ரூ.8,89,900 மற்றும் ரூ.8,79,900 ஆகும்.
வேரியன்ட் வாரியாக Tigor CNG AMT எக்ஸ்-ஷோரூம் விலைகள் :
Tiago CNG AMT-ஆனது XZA மற்றும் XZA+ என 2 வேரியன்ட்ஸ்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.8.85 லட்சம் மற்றும் ரூ.9.55 லட்சம் ஆகும். மேலும் டாடா நிறுவனம் Tiago-விற்க்கு டொர்னாடோ ப்ளூ, Tiago NRG-க்கு கிராஸ்லேண்ட் பீஜ் மற்றும் Tigor-க்கு Meteor Bronze போன்ற புதிய கலர் ஆப்ஷன்களையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த 2 மாடல்களுக்கான புக்கிங்ஸை ரூ. 21,000 என்ற டோக்கன் தொகையில் ஓபன் செய்யப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ள நபர்கள் இந்த கார் மாடல்களை ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம் அல்லது அருகிலுள்ள டீலர்ஷிப்பிற்கு விசிட் செய்யலாம். 5-ஸ்பீட் AMT மற்றும் மேலே குறிப்பிட்டுள்ள புதிய எக்ஸ்டீரியர் ஃபினிஷஸ் தவிர Tiago மற்றும் Tigor-ல் வேறு ஏதும் மாற்றமில்லை.