விற்பனையில் தூள் கிளப்பும் டாடா பஞ்ச்… டஃப் கொடுக்கும் டாப் 5 கார்கள்…
டாடா பஞ்ச் அதிகம் விற்பனையாகும் கார்களில் ஒன்றாகும். இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு AMT உடன், 1.2லி நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சினுடன் வருகிறது. இதன் விலை ரூ.5.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்). விலையிலும் வசதிகளிலும் இதற்குப் போட்டி உள்ள டாப் 5 கார்களை இத்தொகுப்பில் பார்க்கலாம்.
ஹூண்டாய் எக்ஸ்டர் ஒரு சிறந்த மினி-எஸ்யூவி ஆகும். இது 1.2லி நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் கொண்டது. 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டியுடன் கிடைக்கிறது. ஹூண்டாய் எக்ஸ்டெர் இந்த செக்மென்ட்டில் அதிக வசதிகள் கொண்ட கார்களில் ஒன்றாகும். இதன் விலை ரூ.6.13 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது (எக்ஸ்-ஷோரூம்).
மாருதி சுஸுகி இக்னிஸ் குறைத்து மதிப்பிடப்பட்ட சூப்பரான கார். இக்னிஸ் 1.2லி கே-சீரிஸ் எஞ்சினுடன் வருகிறது. இது 5-ஸ்பீடு மேனுவல் அல்லது 5-ஸ்பீடு ஏஎம்டி கொண்டது. இதன் விலை ரூ.6.38 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
ரெனால்ட் கிகர் மற்றொரு சிறிய எஸ்யூவி கார். தேவையான அனைத்து அம்சங்களுடனும் வருகிறது. 1.0லி நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.0லி டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷன்களுடன் கொண்டுள்ளது. கிகர் காரின் விலை ரூ. 5.99 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
நிசான் மேக்னைட் 1.0L நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் அல்லது 1.0L டர்போ-பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனுடன் வருகிறது. AMT மற்றும் CVT டிரான்ஸ்மிஷன் வேரியண்ட் கொண்டிருக்கிறது. நிசான் மேக்னைட்டின் விலை ரூ.6.00 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்).
சிட்ரோன் சி3 காரில் மற்ற கார்களில் உள்ள அனைத்து அம்சங்களும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் இது ஒரு சிறந்த பயண அனுபவத்தைத் தரும். 1.2L நேச்சுரல் ஆஸ்பிரேட்டட் பெட்ரோல் அல்லது 1.2L டர்போ-பெட்ரோல் எஞ்சினுடன் கிடைக்கிறது. சிட்ரோன் சி3 காரின் விலை ரூ.6.16 லட்சம் முதல் தொடங்குகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே.