விலை குறைவான எலெக்ட்ரிக் காருடன் ஆட்டத்தை ஆரம்பித்த டாடா… மாருதியே அண்ணாந்து பாக்க போகுது…
ஜனவரி மாதம் முடிவடைந்து பிப்ரவரி மாதத்தில் நாம் அடியெடுத்து வைத்துள்ளோம். இந்த நேரத்தில் கடந்த ஜனவரி மாதத்திற்கான டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதில், அனைத்து விதங்களிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவின் உள்நாட்டு சந்தையில் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 47,987 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 53,633 ஆக உயர்ந்துள்ளது. இது 12 சதவீத வளர்ச்சி ஆகும்.
அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் இருந்து கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 302 கார்களை மட்டுமே வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 400 ஆக உயர்ந்துள்ளது. இது 32 சதவீத வளர்ச்சி ஆகும்.
ஒட்டுமொத்தமாக பார்த்தால் (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி), டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் 48,289 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 54,033 ஆக உயர்ந்துள்ளது. இது 12 சதவீத வளர்ச்சி ஆகும்.
இந்த ஒட்டுமொத்த விற்பனை எண்ணிக்கையில் எலெக்ட்ரிக் கார்களும் (Electric Cars) அடங்கும் என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும். எலெக்ட்ரிக் கார்களின் விற்பனையை மட்டும் தனியாக எடுத்து கொண்டாலும் கூட, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் ஒட்டுமொத்தமாக (உள்நாட்டு விற்பனை + ஏற்றுமதி) 4,133 கார்களை மட்டுமே விற்பனை செய்திருந்தது. ஆனால் இந்த எண்ணிக்கை நடப்பு 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 6,979 ஆக உயர்ந்துள்ளது. இது 69 சதவீத வளர்ச்சி ஆகும்.