டாடா டெக்னாலஜிஸ் உயர் பதவியில் தமிழ் பெண்! யார் இந்த சுகன்யா சதாசிவன்?

டாடா குழுமத்தின் டாடா டெக்னாலஜிஸ் லிமிடெட் நிறுவனத்துக்கு சி.ஓ.ஓ. எனப்படும் தலைமை இயக்க அதிகாரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த சுகன்யா சதாசிவன் நியமிப்பட்டுள்ளார். வியாழக்கிழமை அவர் பொறுப்பேற்றுள்ளார்.

டாடா டெக்னாலஜிஸ் நிறுவனம் குளோபல் இன்ஜினியரிங் மற்றும் ப்ராடெக்ட் டெவலப்மென்ட் டிஜிட்டல் சேவைகளை வழங்கி வருகிறது. டாடா குழுமத்தில் சிறப்பாக இயங்கிவரும் இந்த நிறுவனத்தின் புதிய சிஓஓவாக சுகன்யா சதாசிவன் நியமிக்கப்பட்டிருக்கிறார்.

அண்மையில் ஐபிஓ மூலம் இந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட நிலையில், அடுத்த முக்கிய நடவடிக்கையாக, டாடா டெக்னாலஜிஸின் புதிய சிஓஓ பொறுப்பேற்றிருப்பது முதலீட்டாளர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

சுகன்யா சதாசிவன் பின்னணி என்ன?

தமிழ்நாட்டைச் சேர்ந்த சுகன்யா சதாசிவன் பாரதியார் பல்கலைக்கழகத்தில் கம்பியூட்டர் சையின்ஸ் மற்றும் இன்பர்மேட்டிக்ஸ் துறையில் இளங்கலை பட்டம் பெற்றவர். ஐ.டி. துறையில் 33 வருடங்களுக்கு மேல் பணியாற்றிய ஆழ்ந்த அனுபவம் கொண்டவர்.

சுகன்யா சதாசிவன் பொறுப்பேற்றதும் நிறுவனத்தின் டெலிவரி மற்றும் ஆப்ரேஷன்ஸ் செயல்பாடுகளை மேம்படுத்தும் பணிகளில் கவனம் செலுத்த இருப்பதாக கூறப்படுகிறது. டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் டிஜிட்டல் மற்றும் ஐ.டி. பிரிவுகளுடன் இணைந்து சேவை மற்றும் வர்த்தக விரிவாக்கப் பணிகளையும் வழிநடத்துவார்.

டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சேவைப் பிரிவில் 30 வருடங்களுக்கு மேலாக வேலை பார்த்த அனுபவம் கொண்டிருப்பது இவரது முக்கிய பலமாகக் கருதப்படுகிறது. டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனத்தில் பல்வேறு நிலைகளில் தலைமைப் பொறுப்புகளை வகித்து திறமையாக செயல்பட்டுள்ளார்.

இதற்கு முன், சுகன்யா டிசிஎஸ் நிறுவனத்தில் மூத்த துணைத் தலைவர், தலைமை தகவல் அதிகாரி போன்ற முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ளார். மூலோபாய மாற்ற முயற்சிகளுக்கும் தலைமை பொறுப்பில் இருந்தார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *