TATA: விளம்பரமே செய்யாமல் ரூ.4,000 கோடி சம்பாதித்த ZUDIO.. கடும் சோகத்தில் அம்பானி..!!
பொதுவாக ஒரு நிறுவனத்தை தொடங்கும் போது , அதனை மக்களிடம் சென்று சேர்க்க விளம்பரங்கள் செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த விளம்பரங்களுக்கு தான் பெரிய அளவில் செலவிட நேரிடும். ஆனால் விளம்பரமே இல்லாமல் 4,000 கோடி ரூபாய் அளவு வருவாய் ஈட்டியுள்ளது டாடாவின் ZUDIO நிறுவனம்.
டாடா-வின் ZUDIO நிறுவனம்: இந்தியாவில் டாடா குழுமம் கால்பதிக்காத துறையே இல்லை என்ற அளவுக்கு எல்லா துறைகளிலும் நுழைந்துள்ளது. அப்படி ஆடைகளுக்கு என டாடா குழுமம் ஏற்கனவே வெஸ்ட்சைடு என்ற பெயரில் ஸ்டோர்களை வைத்துள்ளது. ப்ரீமியம் தரம் கொண்ட ஆடைகள் மட்டுமே இங்கே விற்பனை செய்யப்படுகின்றன என்பதால் விலை அதிகமான ஆடைகள் தான் இங்கு கிடைக்கும்.
இந்தியா போன்ற ஒரு நாட்டில் ஒரு சட்டையை 3 ஆயிரம் ரூபாய் கொடுத்த வாங்க எத்தனை பேர் முன் வருவர்?. எனவே குறைந்த விலையில் ஆடைகளை விற்பனை செய்வதற்காக டாடா குழுமம் கொண்டு வந்த நிறுவனம் தான் ZUDIO.
95% மக்களை டார்கெட் செய்யும் உத்தி: இந்திய மக்கள் தொகையில் 5 விழுக்காட்டினர் தான் அதிக செலவு செய்து ஆடை வாங்குபவர்கள். மீதமுள்ள 95 விழுக்காடு மக்களுக்கு ஆடைகளை விற்பனை செய்யும் நோக்கத்தில் 2016ஆம் ஆண்டு டாடா குழுமம் ZUDIOஐ தொடங்கியது கிட்டத்தட்ட 7 வருடங்களாகிறது.
ஆனால் இதுவரை ZUDIOவிற்கு என விளம்பரம் எதையும் டாடா குழுமம் செய்ததில்லை. இருப்பினும் அது பெரியளவில் வளர்ச்சி அடைந்து தான் வருகிறது.
சிறிய நகரங்களில் கவனம்: சரியான டார்கெட் ஆடியன்ஸை முடிவு செய்து அவர்களை நோக்கி விற்பனை செய்வது தான் ZUDIOவின் வெற்றி மந்திரம். ஏனெனில் ZUDIO ஸ்டோர்கள் பெரும்பாலும் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கின்றன.
அது மட்டுமில்லாமல் சிட்டியில் பிரைம் லொகேஷனில் கடை வைக்க விரும்புவதில்லை. இதனால் கடை வாடகை, முன் பணம் ஆகியவற்றை பெருமளவில் சேமிக்க முடிந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல் Franchisee Owned, Company Operated என்ற கொள்கையில் தான் இந்த கடைகள் நிறுவப்படுகின்றன.
தற்போது இந்தியா முழுவதும் உள்ள ZUDIO கடைகளின் எண்ணிக்கை 411. இதன் மூலம் டாடா குழுமத்திற்கு கிடைக்கும் வருவாய் 4,000 கோடி ரூபாய். 7 ஆண்டுகளிலேயே விளம்பரம் ஏதும் செய்யாமல் இந்த நிறுவனம் வளர்ச்சி அடைந்துள்ளது. இரண்டம் நிலை நிகரங்கள் மற்றும் GEN Z தலைமுறையினர் தான் இவர்களின் டார்கெட்.
இந்த கடையில் 1,000க்கு கீழ் உள்ள ஆடைகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன. ஆடைகள் மட்டுமின்றி காலணிகளும் கிடைக்கின்றன. அது தவிர டாடா குழுமத்தின் நம்பகத்தன்மையும் உடன் இருக்கிறது என்பதால் மக்கள் மத்தியில் இந்த கடைகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.