மருத்துவ காப்பீடு இருந்தால் ரூ.50,000 வரை வரிச் சலுகை? என்ன சொல்கிறது பிரிவு 80D?
வ ருமான வரி விலக்கு பெற திட்டமிட்டு இருப்பவர்கள் வருமான வரி சட்டத்தின் பிரிவு 80Dஐ கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.
இது மருத்துவ தேவையின் போது உங்களுக்கு உதவிகரம் நீட்டுவது மட்டும் , வருமான வரி விலக்கும் பெறுகிறது.பிரிவு 80D: இந்தியாவில் பெரும்பாலான மக்கள் மருத்துவ காப்பீட்டைத் தேவையற்ற முதலீடாகக் கருதுகின்றனர். திடீரென ஒரு மருத்துவ அவசர நிலை தேவைப்படும் போது சேமிப்பில் இருந்தோ அல்லது கடன் பெற்றோ அதற்கு செலவு செய்கிறது. எனவே மக்கள் மருத்துவ காப்பீடு வாங்குவதை ஊக்குவிக்க மத்திய அரசு பிரிவு 80D -யின் கீழ் வரிச் சலுகைகளை வழங்குகிறது.
ஒவ்வொரு தனிநபரும் நிதியாண்டில் மருத்துவ காப்பீட்டிற்காக செலுத்திய ப்ரீமியம் தொகைக்கு விலக்கு பெற முடியும். டாப் -ஆப் திட்டங்கள் மற்றும் தீவிர நோய்களுக்கான திட்டங்களுக்கும் இது பொருந்தும்.பிரிவு 80Dஇன் கீழ் யாரெல்லாம் சலுகை பெற முடியும்: தனிநபர் மற்றும் பிரிக்கப்படாத இந்து குடும்பத்தினர் இந்த பிரிவின் கீழ் வருமான வரி சலுகை பெற முடியும்பிரிவு 80D -இல் எதற்கெல்லாம் விலக்கு கிடைக்கும்:தனக்காக மற்றும் குடும்பத்திற்காக எடுக்கப்பட்ட மருத்துவ காப்பீட்டிற்காக செலுத்தப்பட்ட ப்ரீமியம் தொகைமூத்த குடிமக்களுக்கான மருத்துவ காப்பீடு செலவுகள்மருத்துவ பரிசோதனைகள்மருத்துவ காப்பீட்டு பிரீமியம் (பணமாக செலுத்தக்கூடாது):தனக்காக, மனைவி, குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு செலுத்தப்பட்ட பிரீமியத்திற்கு ரூ.25,000 வரை அல்லது பெற்றோர் மூத்த குடிமக்களுக்கு (60 வயதுக்கு மேல்) இருந்தால் ரூ.50,000 வரைமருத்துவ பரிசோதனைகள்(பணமாக செலுத்த அனுமதி உண்டு):தனக்காக, மனைவிக்கு அனுமதி உண்டு.
குழந்தைகள் , பெற்றோருக்கு ரூ.5,000 வரைமருத்துவ செலவுகள்:மருத்துவ காப்பீடு இல்லாத மூத்த குடிமக்களுக்கு (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) மேற்கொண்ட மருத்துவ செலவுகளுக்கு ரூ.50,000 வரை விலக்கு கோரலாம். பெற முடியும். ஒருவேளை மூத்த குடிமக்களாக இருந்தால் ரூ.50,000 வரை பெறலாம்.உதாரணம்: அருண் 40 வயதுடையவர், அவரது தந்தை 70 வயதுடையவர்.
தனக்கான மருத்துவ காப்பீட்டிற்கு அருண் ரூ., 30,000 மற்றும் தந்தைக்கான மருத்துவ காப்பீட்டிற்காக ரூ.35,000 ப்ரீமியம் செலுத்தினால், அந்த நிதியாண்டில் அருண் எவ்வளவு தொகை விலக்கு பெற முடியுமா? அவர் 35,000 செலுத்துவதால், மொத்தமாக 25,000 +35,000 என ரூ.60,000 வரை வரி விலக்கு பெற முடியும்.80D-இன் கீழ் வரி விலக்கு பெறுவதற்கான முக்கிய நிபந்தனை: மருத்துவ பரிசோதனைக்கு பணம் உட்பட அனைத்து வடிவத்திலும் தொகையை செலுத்துங்கள், ஆனால் ப்ரீமியம் தொகை மற்றும் மருத்துவ செலவுகள், பணமாக இருக்கலாம்.