பட்ஜெட்-ல் வரிக் குறைப்புக் கட்டாயம் இருக்கு.. நிர்மலா சீதாராமன் சொல்லப்போகும் குட் நியூஸ்..!
பொதுத் தேர்தல் நெருங்கி வரும் காரணத்தால், இது ஆண்டுப் பட்ஜெட் இடைக்காலப் பட்ஜெட்டாக அமைந்துள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2024ஆம் ஆண்டுக்கான இடைக்காலப் பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்யத் தயாராகி வரும் வேளையில், முக்கியமான விஷயம் வெளியாகியுள்ளது.ஜனவரி 31 ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் துவங்கும் வேளையில் பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் இடைக்காலப் பட்ஜெட் அறிக்கை எப்படியிருக்கும் எனப் பல கணிப்புகள் வெளியாகி வரும் வேளையில் நிதியமைச்சக அதிகாரிகளிடம் இருந்து முக்கிய அறிவிப்பு கசிந்துள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்ய உள்ள இடைக்காலப் பட்ஜெட் 2024 அறிக்கையில் கவர்ச்சியான அறிவிப்புகள் இருக்க வாய்ப்பில்லை, ஆனால் சிறிய வரி நிவாரண நடவடிக்கைகள் மற்றும் மத்திய அரசின் சில நல்ல திட்டங்களுக்கான நிதியை ஒதுக்கீடு செய்ய வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடைக்காலப் பட்ஜெட் 2024 அறிக்கையில் குறிப்பிடத்தக்க வகையிலான வருமான வரி விகித மாற்றங்கள், குறிப்பாக வரி செலுத்து மக்களின் பிரமிட்டின் அடிமட்டத்தில் உள்ளவர்களுக்கு முக்கியமான சலுகை கிடைக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.வருமான வரி செலுத்துவோரை புதிய வருமான வரி பிரிவுக்கு மாற்றும் நோக்குடன் standard deduction பிரிவில் கணிசமான உயர்வும், சில வரி விலக்கு வரம்பு குறித்த அறிவிப்புகள் 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்காலப் பட்ஜெட் பிப்ரவரி 1 ஆம் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமர் கோயிலை விடுங்க.. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முடிவு இதுதானாம்? வரியில் புதிய மாற்றம்..? வருமான வரித் துறை தற்போது ஆதாரத்தில் கழிக்கப்பட்ட வரி (TDS) மற்றும் வரி செலுத்துவோரின் 360 டிகிரி விவரக்குறிப்பு ஆகியவற்றின் கீழ் கூடுதல் பரிவர்த்தனைகளைச் சேர்ப்பதன் மூலம் வரி வருவாய் வசூல் செயல்திறனை அதிகரிக்கும் வழிகளைத் தேடி வருகிறது.மத்திய நிதியமைச்சகமும், வருமான வரி துறையும் கடந்த சில ஆண்டுகளாக எடுத்து வரும் முயற்சிகள் பெரிய அளவிலான மாற்றங்களையும், வரி வசூலையும் அதிகரித்துள்ளது.