டிசிஎஸ்: லாபத்திலும், வருவாயிலும் மந்தமான வளர்ச்சி.. ஆனா முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்! எப்படி..?

ந்தியாவின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) டிசம்பர் 2023 உடன் முடிவடைந்த 3வது காலாண்டில் சந்தை கணிப்புகளை விட அதிக வருவாயைப் பதிவு செய்துள்ளது.2023 ஆம் ஆண்டு டிசிஎஸ் மட்டும் அல்லாமல் அனைத்து ஐடி நிறுவனங்களுக்கும் மோசமான ஆண்டாக அமைந்த நிலையில் டிசம்பர் காலாண்டு முடிவு முதலீட்டாளர்களுக்கு முக்கியமான விஷயமாக உள்ளது.
இதனிடையில் டிசிஎஸ் திட்டமிட்டபடி ஜனவரி 11 ஆம் தேதி தனது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்தியாவில் அதிகளவிலான ஐடி ஊழியர்களை வைத்துக்கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் டிசிஎஸ் டிசம்பர் காலாண்டில் ஒருங்கிணைந்த நிகர லாப அளவில் வெறும் 2 சதவீத உயர்வை வருடாந்திர அடிப்படையில் பதிவு செய்துள்ளது.இதன் மூலம் டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் 11,058 கோடி ரூபாய் லாபமாகவும், வருவாய் 4 சதவீதம் அதிகரித்து 60,583 கோடி ருபாயை பெற்றுள்ளது. சந்தை கணிப்பில் டிசிஎஸ் 60,100 முதல் 60,300 கோடி வருவாயும், 11,446 கோடி லாபம் பெறும் எனக் கணிக்கப்பட்ட நிலையில் லாபத்தில் கோட்டைவிட்டு உள்ளது.டிசம்பர் மாத மந்தமான லாப அளவீட்டின் மூலம் முதலீட்டாளர்களை இழக்கக் கூடாது என்பதற்காக டிசிஎஸ் நிர்வாகம் ஒரு பங்குக்கு ரூ.18 சிறப்பு ஈவுத்தொகையும், 9 ரூபாயை இடைக்கால ஈவுத்தொகை அளிக்கப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.செப்டம்பர் காலாண்டை ஒப்பிடுகையில் டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் வருவாய் 1.5% உயர்ந்தது, லாபம் 2.5% குறைந்துள்ளது. மேலும் நிலையான நாணய மதிப்பீட்டில், டிசம்பர் காலாண்டில் TCS இன் வருவாய் 1.7% அதிகரித்துள்ளது.சம்பளத்தை கொடுக்காத டிசிஎஸ்.. 900 ஐடி ஊழியர்களின் நிலைமை மோசம்..!! ஏற்கனவே தமிழ்குட்ரிட்டன்ஸ் தளத்தில் தெரிவிக்கப்பட்டது போல் அமெரிக்காவில் முக்கிய வழிக்கு டிசிஎஸ்-க்கு எதிராகத் திரும்பிய காரணத்தால் 958 கோடி ரூபாயை அபராதமாகச் செலுத்தியுள்ளது. இது ஒரு முறை செலவின் கீழ் சேர்க்கப்பட்டு உள்ளது.இக்காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 8.1 பில்லியன் டாலர் மதிப்பிலான திட்டங்களைக் கைப்பற்றியுள்ளது, ஆனால் இது செப்டம்பர் மாதம் பெறப்பட்ட 11.2 பில்லியன் டாலர் திட்டத்தில் இது மிகவும் குறைவாகும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *