டிசிஎஸ் ஊழியர்கள் எண்ணிக்கை மீண்டும் சரிவு.. ஐடி ஊழியர்களே உஷார்..!!
2023 ஆம் நிதியாண்டின் டிசம்பர் காலாண்டு முடிவுகளை ஜனவரி 11 ஆம் தேதி வெளியிட்ட டிசிஎஸ், இந்த 3 மாத காலகட்டத்தில் 2 சதவீத உயர்வில் 11,058 கோடி ரூபாயை லாபமாகவும், 4 சதவீதம் அதிகரித்து 60,583 கோடி ரூபாயை வருவாயாகவும் பெற்றுள்ளது.இந்த நிலையில் டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிறுவனத்தின் ஊழியர்கள் எண்ணிக்கை மீண்டும் குறைந்துள்ளது, ஐடி ஊழியர்களுக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.
டிசம்பர் 31 நிலவரப்படி டிசிஎஸ் நிறுவனத்தில் மொத்த ஊழியர் எண்ணிக்கை 603,305 ஆக உள்ளது என இக்காலாண்டு முடிவில் தெரிவித்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 608,985 ஆக இருந்த வேளையில் தற்போது வெறும் 3 மாதத்தில் 5680 ஊழியர்கள் குறைந்துள்ளனர்.செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டிலும், ஜூன் காலாண்டையும் ஒப்பிடுகையில் டிசிஎஸ் நிறுவனத்தின் மொத்த பணியாளர்கள் எண்ணிக்கையில் 6,333 ஊழியர்கள் குறைந்து 608,985 ஆகச் சரிந்தது. இப்படித் தொடர்ந்து ஊழியர்கள் குறைந்து வருவது ஐடி ஊழியர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.இந்தியாவின் மிகப்பெரிய ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்திலேயே இந்த நிலையெனில் மற்ற நிறுவனத்தில் சொல்லவா வேண்டும் என்ற எண்ணம் தான் ஐடி ஊழியர்கள் மத்தியில் உள்ளது. இதேவேளையில் டிசிஎஸ் நிறுவனத்தின் அட்ரிஷன் விகிதம் டிசம்பர் மாதத்தில் 13.3% ஆகக் குறைந்துள்ளது. இது செப்டம்பர் காலாண்டில் 14.9% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.கல்லூரியில் இருந்து தொடர்ந்து பட்டதாரிகளைப் பணியில் அமர்த்துவதற்கும், ஊழியர்களின் திறமைகளை இயல்பாக வளர்ப்பதற்கும் நாங்கள் முடிவு செய்துள்ளோம். அடுத்த ஆண்டுக்கான எங்கள் கேம்பஸ் இண்டர்வியூவ் செயல்முறையை நாங்கள் தொடங்கியுள்ளோம் என்று டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை மனிதவள அதிகாரி மிலிந்த் லக்காட் கூறினார்.TCS-க்கு பறந்த நோட்டீஸ்.. பதறிய கிருதிவாசன், என்ன நடந்தது..!! டிசிஎஸ் காலாண்டில் TCS நிறுவனத்தின் பிராந்திய அடிப்படையிலான வளர்ச்சியைப் பார்க்கும் போது வருவாயில் பிரிட்டன் நாட்டில் 8.1% வளர்ச்சியும், வட அமெரிக்காவின் வருவாய் 3% குறைந்துள்ளது.வளர்ந்து வரும் சந்தைகளில் வருவாயில் டிசிஎஸ் மிகவும் வலுவான இரட்டை இலக்க வளர்ச்சியைக் கண்டது, இந்தியா தலைமையில் 23.4% வளர்ந்தது. இதில் பிஎஸ்என்எல் ஆர்டரின் வருவாயும் அடங்கும்.ஐரோப்பா 0.5% வளர்ச்சி, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா 16.0% வளர்ச்சி, லத்தீன் அமெரிக்கா 13.2% வளர்ச்சி, ஆசியா பசிபிக் 3.9% வளர்ச்சி அடைந்துள்ளது என்று TCS தெரிவித்துள்ளது.மேலும் துறைவாரியாகப் பார்க்கும் போது BFSI பிரிவின் வருவாய் 3% குறைந்துள்ளது, ஊடகம் மற்றும் தகவல் தொடர்புகள் 4.9% சரிவைக் கண்டன, மற்றும் தொழில்நுட்ப சேவைகள் 5% குறைந்தன.