தொழில்நுட்ப கோளாறு.. தவறுதலாக அக்கவுண்டுக்கு அனுப்பப்பட்ட ரூ.820 கோடி பணம்.. பகீர் தகவல்!
பொதுத்துறை வங்கியான UCO, பல அக்கவுண்ட்ஸ்களில் தவறாக வரவு வைக்கப்பட்ட சுமார் ரூ.820 கோடியில்,ரூ.705.31 கோடியை வெற்றிகரமாக மீட்டுள்ளது. இந்த தகவலை மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரத் சமீபத்தில் தெரிவித்து உள்ளார். இந்த பெரிய நிதி பரிமாற்ற தவறு நடக்க தொழில்நுட்ப கோளாறு காரணமானதாகவும் குறிப்பிட்டு உள்ளார்.
UCO வங்கியில் தவறுதலாக நடந்த இந்த பண பரிமாற்றம் காரணமாக சுமார் 41,000 UCO பேங்க் அக்கவுண்ட்ஸ்களுக்கு ரூ.820 கோடி நிதி கிரெடிட் ஆனது. வங்கியின் IMPS பேமெண்ட் சேனலில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக இந்த தவறு நடந்துள்ளது.
சமீபத்தில் மக்களவையில் இது தொடர்பாக எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரத், தொழில்நுட்ப கோளாறால் தவறுதலாக UCO பேங்க் அக்கவுண்ட்ஸ்களில் கிரெடிட் செய்யப்பட்ட ரூ.820 கோடியில் இதுவரை ,ரூ.705.31 கோடி வெற்றிகரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள ரூ.114.60 கோடியை மீட்கும் நடவடிக்கையை தீவிரப்படுத்தி இருப்பதாகவும் குறிப்பிட்டு உள்ளார். UCO வங்கியில் இருந்து வேறு அக்கவுண்ட்டிற்கு ரூ.820 கோடி பரிமாற்றம்/டெபாசிட் செய்தது தொடர்பாக UCO வங்கி தனது 2 சப்போர்ட் எஞ்சினியர்ஸ் மற்றும் பிற அடையாளம் தெரியாத நபர்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 15, 2023 அன்று சிபிஐ-யில் எஃப்ஐஆர் பதிவு செய்ததாகவும் அமைச்சர் குறிப்பிட்டு உள்ளார்.
இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 5 ஆம் தேதி மேற்கு வங்கம் மற்றும் கர்நாடகாவில் சுமார் 13 இடங்களில் சிபிஐ சோதனை நடத்தியது. இந்த ரெய்டில் மொபைல் ஃபோன்கள், லேப்டாப்கள், கம்ப்யூட்டர் சிஸ்டம்ஸ், இ-மெயில் டாக்குமென்ட்ஸ் மற்றும் டெபிட்/கிரெடிட் கார்டுகள் போன்ற எலெக்ட்ரானிக் ஆதாரங்களை மீட்டெடுத்தது. நிதிச் சேவைத் துறையில் இணைய பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் மத்திய அரசின் உறுதிப்பாட்டை எடுத்துரைத்துள்ள அமைச்சர், இந்த துறையில் காணப்படும் இணைய பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் மற்றும் லேட்டஸ்ட் ஆன்லைன் நிதி மோசடி சம்பவங்கள் குறித்து விவாதிக்க நவம்பர் 28 அன்று Department of Financial Services ஒரு மீட்டிங் நடத்தியது.
இதில் பல்வேறு அமைச்சகங்கள்/துறைகள், இந்திய ரிசர்வ் வங்கி (RBI), இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), இந்திய சைபர் கிரைம் ஒருங்கிணைப்பு மையம், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) மற்றும் வங்கிகளின் பிரதிநிதிகள் என பலர் பங்கேற்றதாக அமைச்சர் கூறியுள்ளார். டிஜிட்டல் பணப்பரிமாற்றம் தொடர்பான சைபர் அட்டாக்ஸ் மற்றும் மோசடிகளைத் தீர்ப்பதில் கவனம் செலுத்தும் அணுகுமுறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருப்பதாக குறிப்பிட்டார்.
சைபர் செக்யூரிட்டியில் கவனம்:
நிதி மோசடிகள் தொடர்பாக விரைவாகப் புகாரளிக்க வசதியாக, Citizen Financial Cyber Fraud Reporting and Management System என்ற அமைப்பை அரசாங்கம் ஏற்கனவே நிறுவியுள்ளது. நிதி இணைய மோசடிகளை உடனடியாகப் புகாரளிக்க தனிநபர்களுக்கு அதிகாரம் அளிப்பதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த அமைப்பு டிசம்பர் 4, 2023 வரை 4 லட்சத்துக்கும் அதிகமான சம்பவங்களில் மொத்தம் ரூ.1,000 கோடியை சேமித்துள்ளதாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எதிர்பாராத தொழில்நுட்ப கோளாறுக்கு பதிலளிக்கும் விதமாக யூகோ வங்கியில் இருந்து தவறுதலாக கிரெடிட்டான ரூ.705.31 கோடியை மீட்டெடுத்துள்ளது, , நிதி துறையில் இணையப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் முக்கியத்துவத்தை எடுத்துகாட்டுகிறது.