கோவில்கள் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது – அயோத்தியில் நடக்கும் மத அரசியலை தோலுரித்த பா.இரஞ்சித்

பா.இரஞ்சித்தின் தயாரிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ப்ளூ ஸ்டார். இப்படத்தில் அசோக் செல்வன், சாந்தனு, கீர்த்தி பாண்டியன், திவ்யா துரைசாமி, கலையரசன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படம் வருகிற ஜனவரி 25-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் இப்படத்தின் தயாரிப்பாளர் பா.இரஞ்சித்தும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், இன்றைக்கு சூழலில் வீட்டில் கற்பூரம் ஏற்றவில்லை என்றால் நம்மை தீவிரவாதினு சொல்லிடுவாங்க. இந்தியா ரொம்ப தீவிரமான காலகட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது. இன்னும் 10 ஆண்டுகளில் நாம் எவ்வளவு மோசமான இந்தியாவில் இருக்கப்போகிறோம் என்கிற பயம் நிச்சயமாக வருகிறது. நமக்குள் இருக்கும் மதவாதத்தை அழிக்கும் ஒரு கருவியாக கலையை நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். கலை இந்த பிற்போக்குத்தனங்களை சரிசெய்யும் என நம்புகிறேன் என கூறினார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பா.இரஞ்சித், ராமர் கோவில் திறப்பை ஒட்டி அதன் பின்னணியில் நடக்கும் மத அரசியலையும் கவனிக்க வேண்டும். இதையெல்லாம் பார்க்கும் போது மதசார்பின்மை நாடாக உள்ள இந்தியா, எதை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது. கோவில்கள் கூடாது என்பது நம்முடைய பிரச்சனை அல்ல.

பராசக்தியில் கூட இதுபற்றி ஒரு முக்கியமான டயலாக் இருக்கு, கோவில்கள் கூடாது என்பதல்ல, கோவில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது என்பது தான் நம்முடைய கவலை. இந்த நிகழ்ச்சியில் சூப்பர்ஸ்டார் கலந்துகொண்டது பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு, அது அவருடைய தனிப்பட்ட விருப்பமாக இருந்தாலும் அவர் ராமர் கோவில் பற்றி சொல்லும்போது, 500 ஆண்டுகால பிரச்சனை தீர்ந்திருப்பதாக சொன்னார். அவரின் இந்த கருத்தில் எனக்கு விமர்சனம் உள்ளது என ஓப்பனாக பா.இரஞ்சித் பேசி உள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *