வயநாடில் போட்டியிடும் ராகுல் காந்தி, இந்தியா கூட்டணியில் பதற்றம்: காரணம் என்ன?

இந்தியாவில் இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் முழு முனைப்புடன் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டன. தேர்தல் வேட்பாளர்கள், கூட்டணிகள், தொகுதிப் பங்கீடுகள் என தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. கட்சிகள் தங்கள் வாக்காளர்களின் பட்டியலை கட்டம் கட்டமாக அறிவித்து வருகின்றன்.

இந்த நிலையில், நேற்று காங்கிரஸ் கட்சி மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. நேற்று டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் காங்கிரஸ் கட்சியின் பொதுச்சலெயாளர் கே.சி. வேணுகோபால், பொருளாளர் அஜய் மாக்கான் உள்ளிட்டோர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்த பட்டிய வெளியிடப்பட்டது. ராகுல் காந்தி உட்பட 39 வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள் பற்றிய தகவல் அளிக்கப்பட்டது. பட்டியலில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், சத்தீஸ்கர் மாநில முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல், திருவனந்தபுரம் எம்பி சசி தரூர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

வயநாடில் ராகுல் காந்தி

ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிட எடுத்திருக்கும் முடிவு இந்தியா கூட்டணிக்குள் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியின் ஒரு அங்கமாக உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) ஏற்கனவே அதே தொகுதியில் அன்னி ராஜாவை களமிறக்கியுள்ளது. இந்த கட்சிகள் அனைத்தும் டெல்லியில் இந்தியா பிளாக் என்ற ஒரே குடையின் கீழ் ஒன்றிணைந்தாலும், கேரளாவில் உள்ள பிராந்திய அரசியல் காட்சி வேறு வகையில் உள்ளது.

சி.பி.ஐ -யும் காங்கிரஸூம் அந்த தொகுதிக்கான வேட்பாளர்களை இறுதி செய்வதற்கு முன்பு ஒருவரையொருவர் கலந்தாலோசிக்காமல் இருந்திருக்கலாம் என்றும், இதுவே இந்த குழப்பத்திற்கு காரணம் என்றும் அரசியல் பார்வையாளர்கள் ஊகிக்கின்றனர். சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜாவின் மனைவியும், சிபிஐயின் தேசிய மகளிர் கூட்டமைப்பில் முக்கியப் பிரமுகருமான அன்னி ராஜாவை ராகுல் காந்தி எதிர்கொண்டால், அது தேர்தல் களத்தில் ஒரு புதிரான பரிமாணத்தை சேர்க்கும்.

அன்னி ராஜா தேர்தல் களத்தில் இறங்குவது, மக்களவைத் தேர்தலில் அவரது முதல் பயணமாக இருக்கும். இது இந்த போட்டிக்கான எதிர்பார்ப்பை இன்னும் அதிகமாக்குக்கிறது. கேரள அரசியல் தேசிய அரசியல் ஒருங்கிணைப்பிலிருந்து வேறுபட்டு இயங்குகிறது என்ற அவரது கூற்று, கேரள தேர்தல் களத்தின் நுணுக்கமான இயக்கவியலைப் பிரதிபலிக்கிறது. மாநில அரசியலை பொறுத்தவரையில், இடது ஜனநாயக முன்னணி (LDF) மற்றும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு (UDF) எதிராக பாரம்பரிய போட்டி நிலவி வரும் அதே வேளையில், தேசிய அரசியலில் இந்தக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு ஒரு தார்மீக சவாலாக இருப்பது நிச்சயம்.

இதற்கு முன்னர் வயநாட்டில் ராகுல் காந்தி கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். எனினும், வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் ஒரு புதிய சவாலாகவே பார்க்கப்படுகின்றது. வயநாடு மற்றும் திருவனந்தபுரம் உட்பட கேரளாவில் நான்கு இடங்களை சிபிஐ பெற்றுள்ள நிலையில், சிபிஎம் தலைமையிலான எல்டிஎஃப் கட்சிக்குள், தேர்தல் களம் தீவிர போட்டிக்கு தயாராகி வருகிறது.

முன்னதாக நேற்று வேட்பாளர் பட்டியலை வெளியிடும்போது, “காங்கிரஸ் கட்சி மிகவும் தெளிவாக உள்ளது. பாஜக இடங்களை முடிந்தவரை குறைப்பதுவே எங்கள் எண்ணம். பாஜக இடங்களைக் குறைக்க நாங்கள் எதையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறோம். ஆனால் மற்ற கூட்டணி கட்சிகளிடமும் அதே அளவிலான கூட்டாண்மையை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.” என்று வேணுகோபால் கூறினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *