ஜேர்மனியில் டெர்மினேட்டர் புகழ் நடிகருக்கு ஏற்பட்ட சிக்கல்…
டெர்மினேட்டர் புகழ் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்நேகர், ஜேர்மன் விமான நிலையம் ஒன்றில் சுங்க அதிகாரிகளால் மூன்று மணி நேரம் பிடித்துவைக்கப்பட்டார்.
என்ன பிரச்சினை?
ஆஸ்திரியாவில் பிறந்தவரும், முன்னாள் கலிபோர்னியா ஆளுநருமான டெர்மினேட்டர் திரைப்பட புகழ் நடிகரான அர்னால்ட் (76), அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்திலிருந்து ஜேர்மனியின் Munich விமான நிலையத்துக்கு வந்த நிலையில், சுங்க அதிகாரிகள் அவரது உடைமைகளை சோதனையிட்டனர்.
அப்போது, அவரிடம் விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்று இருந்தது தெரியவந்தது. அந்த கைக்கடிகாரம், சுவிஸ் கைக்கடிகார நிறுவனம் ஒன்றால் அர்னால்டுக்காக என பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட கைக்கடிகாரம் ஆகும்.
அதன் மதிப்பு 22,000 யூரோக்கள் ஆகும். அந்த கைக்கடிகாரம் குறித்த விவரங்கள் அர்னால்டின் சுங்க ஆவணங்களில் குறிப்பிடப்படவில்லை. ஆகவே, Munich விமான நிலைய சுங்க அதிகாரிகள், அர்னால்டை மூன்று மணி நேரம் பிடித்துவைத்துக்கொண்டார்கள்.
அர்னால்ட் அளித்த விளக்கம்
அந்த கைக்கடிகாரம், பருவநிலை தொடர்பான தனது தொண்டு நிறுவனத்துக்கு நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதை நிகழ்ச்சி ஒன்றில் ஏலம் விட இருப்பதாகவும் அர்னால்ட் விளக்கியும், ஜேர்மன் அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
அவர்கள், அபராதம் மற்றும் வரியாக அர்னால்ட் 35,000 யூரோக்கள் செலுத்தியே ஆகவேண்டும் என நிர்ப்பந்திக்க, அதுவும், அந்த தொகையில் பாதி ரொக்கமாகத்தான் செலுத்தப்படவேண்டும் என விதி உள்ளது என்று கூற, அர்னால்டிடமோ, கையில் அவ்வளவு ரொக்கம் இல்லை.