|

சிறையிலிருந்து தப்பிய பயங்கர கைதி: நாடொன்றில் அறிவிக்கப்பட்டுள்ள அவசர நிலை

ஈக்வடார் நாட்டில் பெரும் குற்றவாளிகள் அடைக்கப்பட்ட சிறையில் இருந்து பயங்கர கைதி தப்பிய பிறகு குண்டர்கள் கூட்டம் தொலைக்காட்சி நிலையத்தை ஆக்கிரமிப்பு செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறையில் இருந்து தப்பிய கைதிகள்

ஈக்வடார் நாட்டில் உள்ள மிகப்பெரிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டு இருந்த சிறைச் சாலையில் இருந்து பயங்கர கைதி தப்பி இருப்பது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை குண்டர்கள் கூட்டம் ஒன்று பயங்கர ஆயுதத்துடன் Guayaquil நகரில் உள்ள தொலைகாட்சி நிலையம் ஒன்றை ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

மேலும் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதலில் ஈடுபட்டு வரும் ரவுடிகளால் பாதுகாப்பு படைகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர்.

அவசரநிலை பிரகடனம்

சிறையில் இருந்து அதிபயங்கரமான குற்றவாளி தப்பிய பிறகு ஈக்வடார் நாட்டில் குண்டர்கள் போரை அறிவித்ததை தொடர்ந்து, சில மணி நேரத்தில் அந்த நாட்டின் ஜனாதிபதி டேனியல் நோபோவா(Daniel Noboa) நாட்டில் உள்நாட்டு ஆயுத மோதல் உருவாகி இருப்பதாக அறிவித்துள்ளார்.

மேலும் ஆயுத மோதலில் ஈடுபடும் நபர்களை வெளியேற்ற நாட்டின் ஆயுதப் படைகளுக்கு உத்தரவிட்டு இருப்பதாகவும் ஜனாதிபதி நோபாவா அறிவித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *