குஜராத்-க்கு பல்பு கொடுத்த டெஸ்லா.. எலான் மஸ்க் இந்தியா பக்கமே வரலையாம்
தமிழ்நாட்டைத் தொடர்ந்து குஜராத்தில் மாபெரும் முதலீட்டாளர் மாநாடு வைப்ரென்ட் குஜராத் சுமிட் என்ற பெயரில் 10வது முறையாக இக்கூட்டத்தைக் குஜராத் மாநில அரசு நடத்துகிறது.
ஜனவரி 10 ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரையில் 3 நாள் இக்கூட்டம் நடக்கிறது, முதல் நாள் கூட்டத்தில் அதானி குழுமம், ரிலையன்ஸ், டாடா, மாருதி சுசூகி, ஆர்சிலர் மிட்டல் போன்ற நிறுவனங்கள் பெரும் முதலீட்டைச் செய்தது குறிப்பிடத்தக்கது.இந்தக் கூட்டத்தில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தது டெஸ்லா நிறுவனத்தின் அறிவிப்பு, எலான் மஸ்க் வருகையும் தான். ஆனால் இது நடக்காது என்பது உறுதியாகியுள்ளது. குஜராத் மாநில அரசின் உயர் அதிகாரி கூறுகையில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ் குஜராத் வைப்ரென்ட் குளோபல் கூட்டத்திற்கு வரவில்லை. இதன் மூலம் டெஸ்லாவும் இந்தக் கூட்டத்தில் எவ்விதமான அறிவிப்பையும் வெளியிட வாய்ப்பு இல்லை.ஆனால் டெஸ்லா குஜராத்தில் முதலீடு செய்ய எப்போதும் வரவேற்கப்படும், குஜராத் அரசு தரப்பிலிருந்தும் டெஸ்லா உடன் தொடர்ந்து முயற்சி செய்யும் எனக் குஜராத் தொழிற்துறை வளர்ச்சி கார்ப்ரேஷன் அமைப்பின் நிர்வாகத் தலைவர் ராகுல் குப்தா தெரிவித்தார்.டிசம்பர் மாதம் குஜராத் வைப்ரென்ட் குளோபல் கூட்டம் தொடர்பான ஏற்பாடுகள் பலமாக நடந்து வந்த நிலையில், குஜராத் அரசின் செய்தி தொடர்பாளர் ருஷிகேஷ் பட்டேல், எலான் மஸ் குஜராத்தில் தொழிற்சாலை அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், குஜராத் மாநில அரசு கொடுத்துள்ள சலுகைகளை ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். மேலும் வைப்ரென்ட் குஜராத் கூட்டத்தில் எலான் மஸ்க் நேரில் கலந்துகொண்டு இந்த அறிவிப்பை வெளியிடுவார் எனக் கூறினார்.இதைத் தொடர்ந்து இவரின் பேச்சை அதிகாரப்பூர்வ அறிவிப்பாகவே அனைவரும் கருதினர். எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா இந்தியாவில் அமைக்கப்படும் ஜிகாபேக்ட்ரி மூலம் இந்தியாவின் உள்நாட்டுத் தேவையைத் தீர்ப்பதைத் தாண்டி வெளிநாடுகளுக்கு அதிகளவில் ஏற்றுமதி செய்யும் திட்டத்தில் தான் அமைக்க ஆரம்பம் முதல் பேச்சுவார்த்தை நடந்தது.குஜராத்-க்கு 2 மெகா திட்டங்களைத் தூக்கி கொடுத்த டாடா.. செமிகண்டக்டர் திட்டம் தமிழ்நாட்டுக்கு இல்லையா..? அப்படி டெஸ்லா-வின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்து கனகச்சிதமாகப் பொருந்தும் இடமாக டிக் செய்யப்பட்ட 3 மாநிலம் தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத். குறிப்பாகத் தமிழ்நாடு ஏற்கனவே ஒரு ஆட்டோமொபைல் பேஸ்மென்ட், அதிலும் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பில் தமிழ்நாடு முன்னோடி.