டெஸ்லா பாதுகாப்பாக இல்லை… ஐரோப்பாவின் ஒரே ஒரு தொழிற்சாலையை தீக்கிரையாக்கிய குழு
பெர்லின் நகரில் டெஸ்லா தொழிற்சாலைக்கு தீ வைத்துள்ள மர்ம அடிப்படைவாத குழு ஒன்று எலோன் மஸ்க் மீது போர் பிரகடனம் செய்துள்ளது.
ஒரு வார கால உற்பத்தி
ஜேர்மனியில் Vulkan குழு என பரவலாக அறியப்படும் இந்த அராஜகவாதிகள், டெஸ்லா தொழிற்சாலைக்கு நெருப்பு வைத்துவிட்டு, எந்த டெஸ்லாவும் பாதுகாப்பானது அல்ல என்று அறிவித்துள்ளனர்.
ஐரோப்பாவிலேயே மிகப் பெரிய ஒரே ஒரு டெஸ்லா தொழிற்சாலை இதுவாகும். தாக்குதல் சம்பவத்தை அடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், ஒரு வார காலம் உற்பத்தி தடைபடும் என்று கூறப்படுகிறது.
நெருப்பு வைக்கப்பட்ட சம்பவத்தை அடுத்து தீயணைப்பு வீரர்களும் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். சேதத்தின் மதிப்பு நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் என்றே முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லாவை பணிய வைப்போம்
தாக்குதல் சம்பவத்தை அடுத்து 2,700 வார்த்தைகளில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள Vulkangruppe குழு, டெஸ்லா தொழிற்சாலையை இன்று நாசப்படுத்தியுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
இந்த தாக்குதலானது சர்வதேச மகளிர் தினத்துக்கான பரிசு என குறிப்பிட்டுள்ள அந்த குழு, பெர்லினில் அமைந்துள்ள டெஸ்லா தொழிற்சாலை மக்களை வளங்களை, பூமியை,, உழைப்பை உறுஞ்சிவிட்டு வெறும் 6000 வாகனங்களை வெளியிடுவதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும் டெஸ்லா தொழிற்சாலையால் நிலத்தடி நீர் பாழாவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனர். இறுதியாக, டெஸ்லாவை பணிய வைப்போம், மூட வைப்போம் என்றும் சூளுரைத்துள்ளனர்.