தை அமாவாசை: விரத உணவில் இந்த காய்கறிகளை சேர்த்து சமையல் செய்யாதீர்கள்
முன்னோர்களை வழிபட உகந்த நாளாக அமாவாசை கருதப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திலும் வரும் அமாவாசை சிறப்பு வாய்ந்தது என்றாலும், வருடத்தின் 3 அமாவாசைகள் மிக முக்கியமானதாக சொல்லப்படுகிறது.
ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் கண்டிப்பாக தர்ப்பணம் கொடுத்து, முன்னோர்களை வழிபட வேண்டும் என சாஸ்திரங்கள் சொல்கின்றன.
அந்த வகையில் அம்மாவாசை தினத்தன்று உணவில் சேர்க்க வேண்டிய காய்கறிகள் சேர்க்க கூடாத காய்கறிகள் என்ற சாஸ்திரங்கள் உள்ளது.
உணவில் சேர்க்க வேண்டிய காய்கறிகள்
வாழைக்காய்
கீரை வகைகள்
பூசணிக்காய்
உணவில் சேர்க்க கூடாத காய்கறிகள்
வெங்காயம்
பூண்டு
அதேபோல் தர்ப்பணம் முடித்து திதி கொடுத்த பின் அகத்திக்கீரை பசு மாட்டிற்கு கொடுக்க வேண்டும்.
முப்பத்து முற்கோடி தேவர்களும் வாசம் செய்யக்கூடிய கோமாதாவிற்கு அகத்திக்கீரை கொடுக்கும் போது நமது முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
அதோடு முன்னோர்களுக்கு மோட்சமும் கிடைக்கும். எனவே முன்னோர்களுக்கு வருகின்ற தை அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்து முன்னோர்களின் தோஷத்தை போக்கி வளம் பெறலாம்.