தைப்பூச திருவிழா… ஜன.24, 25ம் தேதி பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்!

லகம் முழுவதும் ஆன்மிக அன்பர்கள் இம்மாதம் 25ம் தேதி தைப்பூச திருவிழாவையொட்டி விரதமிருந்து வருகின்றனர்.

தமிழகத்திலும் அனைத்து முருகன் ஆலயங்களில் குறிப்பாக அறுபடை வீடுகளிலும் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள 3ம் படை வீடான பழனி தண்டாயுதபாணி திருக்கோவிலிலும் லட்சக்கணக்கில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக நேற்று முதலே குவிந்து வருகிறார்கள்.

தமிழகம் முழுவதும் இருந்து பழனி முருகனை தரிசிக்க மேலும் பக்தர்கள் வருகை தரலாம் என்பதால் பக்தர்கள் தேவை மற்றும் வசதிகளின் அடிப்படையில் மதுரை – பழநி இடையே ஜனவரி 24 மற்றும் 25 நாட்களில் சிறப்பு ரயில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து தெற்கு ரயில்வே அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ” பழநி தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு மதுரையில் இருந்து பழனிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது.

இந்த அறிவிப்பின் படி மதுரை – பழநி தைப்பூச சிறப்பு ரயில் குறிப்பிட்ட இரு நாட்களிலும் மதுரையிலிருந்து காலை 06.00 மணிக்கு புறப்பட்டு காலை 08.30 மணிக்கு பழனி சென்று சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மறு மார்க்கத்தில் பழநி – மதுரை தைப்பூச சிறப்பு ரயில் பழநியில் இருந்து மாலை 05.45 மணிக்கு புறப்பட்டு இரவு 08.15 மணிக்கு மதுரை வந்து சேரும். இந்த சிறப்பு ரயில் சோழவந்தான், கொடை ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் ரயில் நிலையங்களில் நின்று செல்லும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *