தல தோனியின் சாதனை காலி. டெஸ்ட் போட்டிகளில் புதிய சாதனை படைத்த ஹிட்மேன் ரோஹித் சர்மா !!
இந்தியா வந்துள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.
இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என்ற கணக்கில் தொடரிலும் சமநிலையில் இருக்கும் நிலையில், இரு அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணிக்கு ஜெய்ஸ்வால் (10), சுப்மன் கில் (0) மற்றும் ராஜத் படித்தர் (5) ஆகியோர் வந்த வேகத்தில் விக்கெட்டை இழந்து பெரும் ஏமாற்றத்தை கொடுத்தனர். இதன் மூலம் இந்திய அணி 33 ரன்களுக்கே மூன்று முக்கிய விக்கெட்டுகளை பறிகொடுத்தது.
இதன்பின் களத்திற்கு வந்த ரவீந்திர ஜடேஜாவுடன் கூட்டணி சேர்ந்த கேப்டன் ரோஹித் சர்மா, பொறுப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். ரவீந்திர ஜடேஜா மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் பொறுப்பான பேட்டிங்கின் மூலம் போட்டியின் முதல் நாள் தேநீர் இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்துள்ள இந்திய அணி 185 ரன்கள் எடுத்துள்ளது. ரோஹித் சர்மா 97 ரன்களுடனும், ரவீந்திர ஜடேஜா 68 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.