Thalaivar 171: வெளிநாட்டில் துவங்கும் தலைவர் 171 படத்தின் சூட்டிங்.. அடுத்த ஆண்டில்தான் ரிலீஸ்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் அடுத்தடுத்த படங்கள் ரிலீசாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த ஆண்டில் வெளியான ஜெயிலர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று வசூல்சாதனை செய்துள்ளது.
இந்நிலையில் அடுத்ததாக ரஜினியின் லால் சலாம் படம் இன்னும் சில தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தை அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினி இயக்கியுள்ளார். இதனிடையே தற்போது டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜூடன் இணையவுள்ளார் ரஜினிகாந்த். இந்தப் படம் அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகவுள்ளதாக முன்னதாக லோகேஷ் கனகராஜ் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். படத்தின் கதையை தான் ரஜினியிடம் கூறியவுடனேயே அவர் உற்சாகத்தில் தன்னை கட்டிப்பிடித்துக் கொண்டதாகவும் கூறியிருந்தார். இதுவரை இல்லாதவகையில் ரஜினியை வித்தியாசமான ஜானரில் காட்ட தான் திட்டமிட்டு அதற்கான கதைக்களத்தில் இறங்கியுள்ளதாகவும் அவர் கூறியிருந்தார். இந்தப் படத்தின் சூட்டிங் வரும் ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
நடிகர் ரஜினிகாந்த்: நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பையும் நல்ல வசூலையும் பெற்றுள்ள நிலையில் அடுத்ததாக வரும் பிப்ரவரி 9ம் தேதி ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீடு நடந்து முடிந்துள்ளது. இந்த இசை வெளியீட்டில் ரசிகர்கள் அதிகமாக எதிர்பார்த்ததற்கு இணங்க ரஜினியின் பேச்சு இருந்தது. விஜய் உள்ளிட்ட பல விஷயங்களை அவர் மேடையில் பேசினார். படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துள்ள நிலையில் மொய்தீன் பாய் என்ற கேமியோ கேரக்டரில் ரஜினி நடித்துள்ளார்.
வேட்டையன் படம்: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக டிஜே ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்துவருகிறார் ரஜினிகாந்த். இந்தப் படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது ஆந்திர மாநிலம் கடப்பாவில் துவங்கியுள்ளது. இந்த சூட்டிங்கில் ரஜினியுடன் பகத் பாசில், ராணா உள்ளிட்டவர்களும் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் சூட்டிங் அடுத்த மாதத்திற்குள் நிறைவடைந்து படம் மே மாதத்தில் கோடைக் கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தலைவர் 171 படத்தில் ரஜினிகாந்த் கமிட்டாகியுள்ளார்.
ரஜினி -லோகேஷ் கூட்டணி: வரும் ஏப்ரல் மாதத்தில் தலைவர் 171 படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.