Thalapathy 68: பைக்கில் பறக்கும் டபுள் ஆக்க்ஷன் விஜய்… “The G.O.A.T” படத்தின் செகண்ட் லுக் போஸ்டர்

Thalapathy 68 : வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படமான, The G.O.A.T படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Thalapathy 68 : வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் ‘தளபதி 68’ படமான, The G.O.A.T படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கடந்த ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளியான வாரிசு, லியோ ஆகிய 2 திரைப்படங்களும் மாபெரும் வெற்றி பெற்று வசூலிலும் சாதனை படைத்தன. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ படத்தை தொடர்ந்து, தளபதி விஜய் இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்கிறார். இந்த படத்திர்கு தற்காலிகமாக தளபதி 68 என தற்காலிகமாக பெயரிடப்பட்டது.

ஏ.ஜி.எஸ் நிறுவனம், கல்பாத்தி அகோரம் தயாரிக்கிறார். தளபதி 68 படத்துக்கு யுவன்சங்கர் ராஜா இசையமைக்கிறார். சித்தார்த்த முனி ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படத்தில் நடிகர் விஜய்யுடன் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், வைபவ், பிரேம்ஜி, அரவிந்த் ஆகாஷ், அஜய் ராஜ், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி என ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடிக்கிறார்கள்.

இந்த படத்தில் விஜய் அப்பா மகன் என டபுள் ஆக்‌ஷன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது. இலங்கையில் மும்முரமாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தளபதி 68 படம் இந்த ஆண்டு ஜூன் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தளபதி 68 படத்தில் பர்ஸ்ட் லுக் போஸ்டர் டிசம்பர் 31-ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. விஜய் நடிக்கும் தளபதி 68 படத்துக்கு, ‘The Greatest Of All Time’ – The G.O.A.T என்று பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் வெளியானது. விஜய் இந்த படத்தின் போஸ்டரில் அப்பா மற்றும் மகன் கதாபாத்திரத்தில் வரும் காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *