Thangalaan: வேற மாறி.. வேற மாறி.. தங்கலான் படத்தின் புது ரிலீஸ் தேதி.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
சென்னை: பா.ரஞ்சித் இயக்கத்தில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் விக்ரம் நடித்திருக்கும் தங்கலான் திரைப்படம் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில், படம் வெளியீடு சில காரணங்களால் தள்ளிப்போனது.
தற்போது இந்த படத்தின் ரீலிஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படத்தில் விக்ரம் உடன் மாளவிகா மோகனன், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். தங்கலான் படத்தின் மூலம் முதன்முறையாக பா ரஞ்சித்துடன் இணைந்துள்ளார் ஜிவி பிரகாஷ். இதனை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்துடன் இணைந்து பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன் தயாரித்துள்ளது.
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. மிரட்டலான கூட்டணியில் உருவாகும் தங்கலான் திரைப்படன் டீசர் அண்மையில் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
விக்ரமனின் தங்காலன்: தமிழ் சினிமாவைத்தாண்டி இந்திய சினிமா எதிர் பார்த்துக்கொண்டு இருக்கும் திரைப்படம் தங்கலான். இந்த படத்தின் மீதான கூடுதல் ஹப்புக்கு காரணம் விக்ரமும் ரஞ்சித்தும் கூட்டணி அமைத்துள்ளது தான்.
ரஞ்சித் எடுக்கும் ஒவ்வொரு திரைப்படமும் மாஸ்டர் பீஸ் திரைப்படங்களாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. அந்த வரிசையில் தங்கலான் திரைப்படமும் இருக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விக்ரமின் திரைப்பயணத்தில் இந்த திரைப்படம் முக்கியமான படமாக இருக்கும்.