தஞ்சாவூர்: ரூ.120 கோடி மெகா SIPCOT தொழிற்பேட்டையில் தனிச் சிறப்பு.. இதைக் கவனிச்சீங்களா..?!
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2030 ஆம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் அளவீட்டைத் தொட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது தமிழக அரசு. இன்று 2024-25 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
தமிழ்நாட்டின் வேகமான தொழிற்துறை வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வகையில் தேவையான கட்டமைப்பை உருவாக்கும் இலக்குடன் புதிய சிப்காட் தொழிற்பூங்கா தஞ்சாவூர் மாநிலத்தில் அமைக்கப்பட உள்ளது எனப் பட்ஜெட் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தஞ்சை மாவட்டத்திலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் விதமாக, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகில் 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 300 ஏக்கர் நிலப் பரப்பளவில் சிப்காட் நிறுவனம் ஒரு புதிய தொழிற்பூங்காவை அமைக்கும்.
இந்தப் புதிய சிப்காட் தொழிற் பூங்காவில் உணவுப் பொருட்கள் பதப்படுத்துதல் தோல் அல்லாத காலணிகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் மாசு ஏற்படுத்தாத தொழில்கள் அமைக்க உரிய முயற்சிகள் எடுக்கப்படும் எனப் பட்ஜெட் அறிக்கையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
தஞ்சாவூரில் புதிதாக அமைக்கப்படும் சிப்காட் தொழிற் பூங்காவில் சுற்றுச்சூழல் மாசு மீது தனிப்பட்ட கவனத்தைச் செலுத்துவதன் மூலம் தனிக் கவனத்தைப் பெற்றுள்ளது.