அந்த நொடி.. நாசமா போச்சு எல்லாம்.. டிரஸ்ஸை “அது மேல” போட்டு.. டிராபிக்ல தவித்த சுசனா சேத்.. கடவுளே
பெங்களூர்: இன்னும் வாயே திறக்கலியாம் இந்த விசித்திரமான பெண் சுசனா சேத்.. போலீசார் எப்படி எப்படியோ அவரிடம் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்..
ஆனால், சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி கொண்டிருக்கிறாராம். ஆனால், மற்றொருபக்கம் போலீசாரின் விசாரணையில், சில பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த உயர் தொழில்நுட்ப நிறுவனரும், மைண்ட்புல் ஏஐ லேப் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாகவும் சுசனா சேத் என்ற மேதாவி பெண்ணுக்கு 39 வயதாகிறது. இவர் கடந்த 6-ந்தேதி வடக்கு கோவாவில் உள்ள பிரபலமான ஓட்டல் ஒன்றில், தன்னுடைய 4 வயது மகனுடன் ரூம் எடுத்து தங்கியிருக்கிறார்.
என்ன காரணம்: பிறகு 2வது நாளே, மகனை கொன்றுவிட்டு, சடலத்தை சூட்கேஸில் மறைத்து வைத்து கொண்டு தப்ப முயன்றார்.. ஆனால், போலீசார் அவரை மடக்கி பிடித்து, விசாரித்து கொண்டிருக்கிறார்கள். கணவன் டைவர்ஸ் கேட்டதால், அவர் மீதிருந்த கோபத்தில் மகனை கொன்றுள்ளார். இருமல் மருந்து பாட்டில்களை வாங்கி , குழந்தைக்கு ஊற்றி, தலைகாணியால் அமுக்கி கொன்றுள்ளார்.
இப்போதைக்கு போலீசாரின் பிடியில் உள்ளார் அதிகாரி சுசனா சேத்.. மகனை கொன்றதாக இதுவரை ஒப்புக் கொள்ளவில்லை.. “என் மகன் செத்துப்போயிட்டான், அவன் எப்படி இறந்தான் என்றே தெரியாது” என்று சொன்னதையே சொல்லிக் கொண்டிருக்கிறாராம். கணவனுடன் என்ன பிரச்சனை? ஏன் விவாகரத்து என்றும் சொல்லவில்லையாம்.. இதனால், அவரிடம் வாக்குமூலம் எதையும் பெற முடியாமல் போலீசார் கையை பிசைந்து நிற்கிறார்கள்.
மனநல பரிசோதனை: இதையடுத்து சுசனா சேத்துக்கு, மனநல பரிசோதனை செய்யவும் முடிவு செய்துள்ளனர்.. இதுகுறித்து கோவா போலீசார் சொல்லும்போது, சுசனா சேத்தின் மனநிலையை அறிய உள்ளோம்.. கொடூர கொலையின் குற்ற பின்னணியை கண்டறிய, அவரை மனநல பரிசேததனைக்கு உட்படத்தியிருக்கிறோம் என்று கூறியிருக்கிறார்கள்.
ஆனால், மகனை கொன்றுவிட்டு, சடலத்தை என்ன செய்வதென்றே தெரியாமல் ரூமிலேயே விழித்து கொண்டிருந்தாராம்.. ரூம் சர்வீஸ் செய்ய ஓட்டல் ஊழியர்களையும் உள்ளே விடவில்லை.. படுக்கையில் சடலத்துக்கு பக்கத்திலேயே குழம்பி போய் உட்கார்ந்துள்ளார்.. அதற்கு பிறகுதான், சூட்கேஸில் சடலத்தை மறைத்து கொண்டு வெளியே முடிவு செய்துள்ளார்.
டாக்ஸி: பெட்டியின் அடியில் சடலத்தை வைத்து, அதற்குமேல், குழந்தையின் பொம்மைகளையும், துணிகளையும் போட்டு மறைத்துள்ளார்.. டாக்ஸியில் ஏறியபோது, மகனை பார்த்த ஹோட்டல் ஊழியர்கள், குழந்தையை பற்றி விசாரித்திருக்கிறார்கள்.. அதற்கு சுசனா கேதை, தன்னுடைய சொந்தக்காரரின் வீட்டிற்கு அனுப்பி வைத்திருக்கிறேன் என்று சொன்னாராம். அதற்கு பிறகே அவர் தங்கியிருந்த ரூமுக்குள் சென்று பார்த்தபோது, ரத்தக்கறை இருந்துள்ளது.