வடக்கு இஸ்ரேலில் பூமிக்கு அடியில் கேட்ட அந்த சத்தம் – திகைத்து போன இராணுவம்
2013ம் ஆண்டு வடக்கு இஸ்ரேலில் வாழ்ந்துவந்த மக்கள், நிலத்துக்கு அடியில் ஒரு வித்தியாசமான சத்தம் கேட்பதாக அரச அதிகாரிகளிடம் தெரிவித்தார்கள்.
லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் கிராமங்களில் வசித்து வந்த சில இஸ்ரேலியர்களே இப்படியான முறைப்பாட்டை தெரிவித்துள்ளனர்.
நிலத்தை யாரோ தோண்டுவது போலான அந்த சத்தம் விட்டு விட்டு கேட்பதாகவும், சில தினங்களில் அச்சத்தம் முற்றாக நிறுத்தப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்கள்.
லெபனானில் நிலைகொண்டுள்ள ஹிஸ்புல்லாக்கள் எல்லைகளைக் கடந்து இரகசியமாக இஸ்ரேலுக்குள் வந்து பாரிய தாக்குதல்களை மேற்கொள்ளுவதை நோக்காக கொண்டு நிலத்துக்குகீழே சுரங்கப் பாதைகளை அமைத்துவருகின்றார்கள் என்பதை இஸ்ரேலியப் படையினர் அறிந்தார்கள்.
லெபனானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே ஹிஸ்புல்லாக்கள் அமைத்திருந்த நிலக்கீழ் சுரங்கங்களைத் தேடி அழிப்பதற்காகவென்று இஸ்ரேலிய இராணுவம் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை தான் Operation Northern Shield.