பில் கேட்ஸ் வாழ்க்கையை புரட்டிப்போட்ட ‘அந்த’ ஒரு செய்தி.. ரகசியத்தை உத்தார்..!
நிறுவனரும் உலக பணக்காரர்களில் ஒருவருமான பில்கேட்ஸ், சிஇஓ மற்றும் நிர்வாக பணிகளில் இருந்து ஓய்வு பெற்ற பின்னர் சமூகம் சார்ந்த பணிகளில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக மருத்துவம் சார்ந்த ஆராய்ச்சிகள் மற்றும் அது தொடர்பான பணிகளுக்கு நிதியுதவி செய்து வருகிறார்.
மைக்ரோசாப்ட்-ஐ உருவாக்குவது மட்டுமே பணி என கிடந்த தனக்கு பொதுச்சேவையின் மீது எப்படி ஆர்வம் என்பதை அவர் பகிர்ந்துள்ளார்.
பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை: பில் கேட்ஸ் சமூக நலனுக்காக பங்களிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கியது தான் பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை. இதன் மூலம் ஆண்டுதோறும் பல லட்சம் ரூபாய் தொண்டுக்காக வழங்கப்படுகிறது. குறிப்பாக நவீன மருத்துவ ஆய்வுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
பொதுச்சேவைக்கு வந்தது எப்படி?: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தனது 50 வயதில் , நிறுவனத்தை ஒப்படைத்து விட்டு ஓய்வுபெற்றார். அதன் பின்னர் அவரது முழு கவனமும் பொதுநலன் சார்ந்த பணிகளுக்கு திரும்பியது.
இது தொடர்பாக வாட் நவ் என்ற பாட்காஸ்டில் பங்கேற்று பேசிய பில் கேட்ஸ், 1997ஆம் ஆண்டு தான் படித்த ஒரு செய்தி தான் வாழ்க்கையையே மாற்றியது என கூறியுள்ளார்.
அதாவது ஒரு குறிப்பிட்ட நோய்க்கு, உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் குழந்தைகள் இறக்கின்றனர், ஆனால் அமெரிக்காவில் அதே நோய்க்கு மருந்து கிடைத்து குழந்தைகள் குணமாகினர், இந்த தகவல் வாழ்க்கை குறித்த தனது பார்வையையே மாற்றியது என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
மைக்ரோசாப்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, உலகில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையிலான மருந்துகளை உருவாக்க வேண்டும் அதற்கான் ஆய்வுகளுக்கு பங்களிக்க வேண்டும் என அப்போதே முடிவெடுத்ததாக தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் நலன் மீது தனி கவனம்: 18 முதல் 40 வயது வரை மைக்ரோசாப்ட் மட்டுமே என்னுடைய வாழ்க்கையாக இருந்தது அதனை தாண்டி எதையுமே சிந்திக்கவில்லை , எனவே ஓய்வு காலத்தை மக்களுக்கு இன்னும் பயனுள்ள வகையில் மாற்ற வேண்டும் என நினைத்ததாக தெரிவித்துள்ளார்.
மருத்துவ ஆய்வுகள், மக்களை தாக்கும் நோய்கள், அவை எப்படி உருவாகின்றன என்பது குறித்து நிறைய படித்து தெரிந்த கொண்ட பில்கேட்ஸ் , குறிப்பாக குழந்தைகள் நலன் மீது தனி கவனம் செலுத்தினார். தன்னுடைய அறக்கட்டளை மூலம் பல்வேறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என விரும்பி அதற்கான செயல்பாடுகளை முன்னெடுத்தார்.
தற்போது பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளை பல்வேறு நவீன மருந்து கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளுக்கு உதவி செய்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்தில் , இந்த அறக்கட்டளை தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆய்வுகளுக்கு பல்வேறு நிதியுதவிகளை வழங்கியது.
இதே போன்றதொரு பாட்காஸ்டில் டைம் டிராவல் செய்து 2100இல் வாழும் மனிதனை சந்தித்தால் என்ன கேள்வி கேட்பீர்கள், என கேட்டதற்கு, மனித குலம் வளமாக வாழ்கிறதா? செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் நிலை என்ன? ஆகிய கேள்விகளை கேட்பேன் என பில்கேட்ஸ் பதில் அளித்துள்ளார்.