இந்தியாவில் எந்தவொரு பரபரப்பும் இன்றி ஆட்டோவில் சென்றது அந்த பாடகியா!! மஹிந்திரா வாகனத்தில் ஒரு ரவுண்ட்!

துவா லிபா (Dua Lipa), பிரபல அல்பேனியன் பாப் பாடகி. அதேநேரம், பாடல்களை எழுதும் திறனையும் கொண்டுள்ள துவா லிபா இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ளார். இந்தியாவில் மஹிந்திரா தார் வாகனம் ஒன்றில் அமர்ந்திருக்கும் படத்தை துவா லிபா வெளியிட்டுள்ளார். அதற்கு மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

கொஞ்சம் சூடான நாடு என்பதினாலேயே மேற்கத்திய நாட்டு மக்களுக்கு நம் இந்தியா சிறந்த சுற்றுலா தளமாக உள்ளது. ஒவ்வொரு வருடமும் பெரிய எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தருகின்றனர். அதற்கேற்ப, அந்த அளவிற்கு பெரிய நாடு நமது இந்தியா ஆகும்.

இந்த வகையில், அல்பேனியன் நாட்டை சேர்ந்த 28 வயதான பாடகி துவா லிபா இந்தியாவிற்கு அவரது குடும்பத்துடன் சுற்றுலா வந்துள்ளார். இந்தியாவில் பல்வேறு பகுதிகளை சுற்றிப் பார்த்த துவா லிபா குடும்பத்தார் ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.

மேலும், பாப் பாடகி துவா லிபா குடும்பத்தினரின் இந்திய சுற்றுலா படங்களை பிரபல அமெரிக்க மாத நாளிதழான ரோலிங் ஸ்டோனின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. அதில் ஒரு படத்தில், மஹிந்திரா தார் வாகனத்தில் துவா லிபா அமர்ந்திருப்பது போன்றதான காட்சி இடம்பெற்றுள்ளது.

அந்த படம் இடம்பெற்றிருக்கும் ரோலிங் ஸ்டோனினின் இன்ஸ்டாகிராம் பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஆனந்த் மஹிந்திராவின் இந்த டுவிட்டர் பதிவில், “இப்போது பாப் தரவரிசையில் சூடாக எரியும் ஒரு நட்சத்திரம் தனது இந்திய பயணத்திற்கு சமமான சூடான சக்கரங்களை (மஹிந்திரா தார்) தேர்ந்தெடுத்து இருப்பது இயற்கையானது என நான் நினைக்கிறேன்” என குறிப்பிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தற்சமயம் 2ஆம் தலைமுறை தார் வாகனம் விற்பனையில் உள்ளது. ஆனால், பாடகி துவா லிபா அமர்ந்திருப்பது முதல் தலைமுறை தார் வாகனம் ஆகும். தற்போதைய தார் வாகனத்தை பரவலாக சாதாரண சாலைகளிலும், நகரங்களிலும் கூட காண முடிகிறது. ஆனால், முதல் தலைமுறை தார் வாகனத்தை அதிகமாக காட்டுப் பாதைகளுக்கும், மலைப் பாதைகளுக்குமே மக்கள் பயன்படுத்தினர்.

சரியாக சொல்ல வேண்டுமென்றால், அத்தகைய பகுதிகளில் வசிப்பவர்கள் மட்டுமே அந்த சமயத்தில் மஹிந்திரா தார் வாகனத்தை வாங்கினர். மாருதி சுஸுகியின் ஜிப்ஸி அந்த சமயத்தில் பழைய மஹிந்திரா தாருக்கு நேரெதிர் போட்டியாக விளங்கியது. இப்போதும், சிலர் பழைய மஹிந்திரா தார் வாகனத்தை பயன்படுத்துகின்றனர்.

குறிப்பாக, சுற்றுலா விடுதிகளில் இப்போதும் சுற்றுலா பயணிகளுக்கு காடு மற்றும் மலைப்பகுதியை சுற்றிக் காட்ட அதிக எண்ணிக்கையில் பழைய தார் வாகனம் பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில், பழைய தார் வாகனத்தில் பயணிகளால் சுற்றியிருக்கும் அனைத்தையும் எந்தவொரு இடையூறுமின்றி, தெளிவாக காண முடியும். அவ்வாறு, துவா லிபாவின் குடும்பத்தினருக்கு சுற்றிக் காட்ட பழைய தார் வாகனம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *