ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்த நடிகர் தனுஷ்: காரணம் என்ன?.!
சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் இசையில், சித்தார்த் நுனி ஒளிப்பதிவில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர் (Captain Miller).
இப்படம் ஜனவரி 12ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. சமீபத்தில் படத்தின் டிரைலர் காட்சிகள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
படத்தில் நடிகர்கள் தனுஷ், பிரியங்கா மோகன், சிவ ராஜ்குமார், விநாயகன், சுதீப் கிஷான், நாசர், எட்வர்ட் உட்பட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், நடிகர் தனுஷ் தனது ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர்களை நேரில் சந்தித்தார். சமீபத்தில் திருமணம் முடிந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களையும் பதிவு செய்தார்.
கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களால் பெரும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், தற்போது தனுஷ் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரில் சந்தித்து இருக்கிறார்.