சிவாஜியை பளாரென அறைந்த நடிகை.. 3 நாள் காய்ச்சலில் தவித்த சிவாஜி.. என்னதான் நடந்தது..?
தனது அசாத்திய நடிப்பால் திரையுலகையே கட்டி ஆண்ட நடிகர் சிவாஜி கணேசன்.
1952 ஆம் ஆண்டு வெளியான ‘பராசக்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.
கொடுக்கப்படும் கதாபாத்திரத்திற்கு 100 சதவிகிதத்திற்கும் மேல் தனது உழைப்பை கொடுப்பவர், அந்த கதாபாத்திரமாகவே திரையில் வாழ்பவர் நடிகர் சிவாஜி கணேசன்.
நடிப்பை தனது உயிர் மூச்சாக கருதியவர் , முக பாவனை, வசனம், என கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க ஒரு போதும் அவர் தவறியதில்லை.
இவரின் ஈடுகொடுக்க முடியாத நடிப்பிற்கு ‘நடிகர் திலகம்’ என்று போற்றப்பட்டார். பிறரின் நடிப்பை ரசித்து பாராட்டக்கூடியவர், நடிப்பின் நுணுக்கங்களை தயங்காது சக நடிகர்களுக்கு புகட்டுபவர் சிவாஜி.
சிவாஜி நடித்த காலகட்டங்களில் பல நடிகைகளுடன் சேர்ந்து நடித்துள்ளார். ஆனால் இவருக்கு சரியான ஜோடி பத்மினி தான் என்று பலரும் புகழ்ந்துள்ளார்.
சிவாஜி கணேசன் மற்றும் பத்மினியின் ஜோடி திரையில் பார்ப்பதற்கு பல ரசிகர்கள் காத்துக்கிடப்பார்களாம்.
நடனம், நடிப்பு என சக நடிகருக்கு டப் கொடுப்பவர் நடிகை பத்மினி, பரதநாட்டியத்தை நளினம் பொங்க இவரை போல் யாருமே ஆடியதில்லையாம்.
மிகவும் பிரகாசமான முக அழகை கொண்ட பத்மினியின் நாட்டிய அழகுக்கு ‘நாட்டிய பேரொளி’ என்ற பட்டம் அவருக்கு கொடுக்கப்பட்டது.
தெய்வப்பிறவி, பணம், மரகதம், இரு மலர்கள், திருமாள் பெருமை, புனர் ஜென்மம், எதிர்பாராதது, தேனும் பாலும், அமர தீபம், மங்கையர் திலகம், தில்லானா மோகனாம்பாள் என 60க்கும் மேற்பட்ட படங்களில் இருவரும் சேர்ந்து நடித்துள்ளனர்.
அப்படி, சித்ரப்பு நாராயண ராவ் என்பவரின் இயக்கத்தில் சிவாஜியும், பத்மினியும் இணைந்து நடித்த திரைப்படம்தான் ‘எதிர்பாராது’. இந்த படம் 1954ம் வருடம் வெளியானது.
இந்த படத்தில் சிவாஜி பத்மினி இருவரும் காதலித்து வருகின்றனர், வெளிநாட்டிற்கு செல்லும் சிவாஜி கணேசன் எதிர்பாராத விதமாக விமான விபத்தில் இறந்து விட்டதாக செய்தி வருகிறது.
இந்த நிலையில் சூழ்நிலையால் சிவாஜி கணேசனின் தந்தையை பத்மினி திருமணம் முடிக்கிறார். பார்வை பறிபோன நிலையில் சிவாஜி கணேசன் மீண்டும் வீடு திரும்புகிறார்.
அப்படி இருக்க ஒரு நாள் பத்மினி , சிவாஜியும் பழைய நினைவுகள் மலர ஒருவரை ஒருவர் கட்டித்தழுவும் போது சுதாரித்துக் கொள்ளும் பத்மினி சிவாஜியை அறைவது போன்ற காட்சி.
ஆனால் சிவாஜி கணேசனை அறைவது போன்ற காட்சியில் நடிக்க தயக்கம் காட்டிய பத்மினியிடன் கெஞ்சி ஒப்புக்கொள்ள வைக்கிறார் சிவாஜி கணேசன்.
ஷாட்டில் அந்த சீன் வரும் போது, சிவாஜியை ஓங்கி ஒரு அறைவிடுகிறார் பத்மினி, அவர் அறைந்த அறையில் கதிகலங்கி போன சிவாஜிக்கு, அதன் பிறகு 3 நாள் காய்ச்சல் வந்துவிட்டதாம்.
பதறிப்போன பத்மினி நம்மால் தான் சிவாஜிக்கு இந்த நிலை என்று நேரில் அவரை சென்று பார்த்து, அவரது மருத்துவ செலவுகளை ஏற்றதோடு சிவாஜிக்கு ஒரு காரையும் பரிசாக அளித்தாராம் நடிகை பத்மினி.
அடுத்து பத்மினியுடன் நடித்த எம்ஜிஆர் இயக்குனரிடம் பத்மினி என்னை அறைவது போல ஒரு சீனை வையுங்கள் எனக்கு காராவது கிடைக்கும் என்று பத்மினியை கிண்டல் செய்தாராம்.