கேகேஆர் அணியின் பேட்டிங் மிரட்டலா இருக்கே! பிளேயிங் லெவனை கணித்த ஆகாஷ் சோப்ரா
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் கே கே ஆர் அணி பலம் மிகுந்ததாக இருப்பதாக ஆகாஷ் சோப்ரா கணித்துயிருக்கிறார். மேலும் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் விளையாடுவதால் குறைந்தபட்சம் ஐந்து போட்டிகளில் வெல்ல வேண்டும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்திருக்கிறார்.
மேலும் கே கே ஆர் அணியின் பேட்டிங் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து அவர் கருத்து தெரிவித்திருக்கிறார். அதனை தற்போது பார்க்கலாம். கேகேஆர் அணி தொடக்க வீரராக பில் சால்ட் என்ற அதிரடி பேட்ஸ்மேனை பயன்படுத்த வேண்டும்.
அப்படி இல்லை என்றால் ஆப்கானிஸ்தான் அதிரடி விக்கெட் கீப்பர் ரஹ்மத்துல்லா குர்பாசை கே கே ஆர் அணி தொடக்க வீரராக பயன்படுத்த வேண்டும். இதன் மூலம் உங்களுக்கு ஒரு விக்கெட் கீப்பரும் கிடைத்து விடுகிறார். அவருக்கு ஜோடியாக வெங்கடேஷ் ஐயரை களம் இறக்கலாம். மூன்றாவது வீரராக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை நான்காவது வீரராக, நிதிஷ் ராணாவையும் கே கே ஆர் அணி பயன்படுத்தலாம்.
இதே போன்று அதிரடி இந்திய வீரர் ரிங்கு சிங்கை கே.கே.ஆர் அணி ஐந்தாவது இடத்தில் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். ஆறாவது வீரராக ஆல்ரவுண்டர் ஆண்டிரூ ரஸிலை கே கே ஆர் அணி பிளேயிங் லெவனை பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் கே கே ஆர் அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. இதன் பிறகு சுனில் நரேன், ஹர்ஷித் ராணா மற்றும் ஸ்டார்க், சேத்தன் சக்காரியா, மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய வீரர்களை கேகேஆர் பௌலர்களாக பயன்படுத்தலாம்.
இதே போன்று சுயாஷ் ஷர்மா என்ற சுழல் பந்துவீச்சாளரை இம்பேக்ட் வீரராக கே கே ஆர் விளையாட வைக்கலாம் என்றும் ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார். இதேபோன்று கேகேஆர் அணியின் சொந்த மைதானமான ஈடன் கார்டன் மைதானத்தில் ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும். இதனால் நடப்பு சீசனில் ஆடுகளத்தை சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்ற கேகேஆர் அணி வற்புறுத்த வேண்டும் என்று அவர் கூறியிருக்கிறார்.
மைதானங்களில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள். கேகேஆர் அணியில் இந்திய வீரர்களின் பேட்டிங்க் அதிகமாக இருப்பதால் அது அவர்களுக்கு சாதகமாக அமையும் என்று ஆகாஷ் சோப்ரா கூறியிருக்கிறார். இந்த பேட்டிங்கை வைத்துக்கொண்டு கேகேஆர் அணியால் பிளே ஆப் சுற்றுக்கு இம்முறை தகுதி பெற முடியும் என்று தாம் நம்புவதாகவும் ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.