முத்து கண்டுபிடித்த மிகப்பெரிய உண்மை, சிக்கப்போகும் ரோஹினி- சிறகடிக்க ஆசை சீரியல் அடுத்த கதைக்களம்
எஸ்.குமரன் அவர்களின் எதார்த்தமான கதைக்களத்தில் விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வரும் தொடர் சிறகடிக்க ஆசை.
கூட்டுக் குடும்பம், பணத்திற்கு ஆசைப்படாத நியாயம், நேர்மை என இருக்கும் அண்ணாமலை, அவரது மனைவி விஜயா, மனிதர்கள் பெரிய விஷயம் இல்லை, பணக்காரர்கள் தான் நல்லவர்கள், முக்கியமானவர்கள் என இருப்பவர்.
இவர்களுக்கு 3 மகன்கள், இவர்களை சுற்றியே இந்த தொடர் கதைக்களம் செல்கிறது. பொங்கல் கொண்டாட்டத்தை முடித்து அண்ணாமலை குடும்பம் வீட்டிற்கு வந்துவிட்டார்கள், வழக்கம் போல் விஜயா, மீனாவை வேலை வாங்க ஆரம்பிக்கிறார்.
பெரிய சீக்ரெட்
இன்றைய எபிசோடில் ஒரு சவாரி எதர்சையாக முத்துவிற்கு கிடைக்கிறது, அவர் ரோஹினி வைத்திருக்கும் பார்லருக்கு தான் அழைத்து செல்ல கேட்கிறார்.
அங்கு கொண்டுசென்ற முத்துவிற்கு சவாரிக்கு வந்தவர் பணம் கொடுக்காமல் செல்கிறார், இதனால் முத்து பார்லர் செல்வார் என தெரிகிறது.
அங்கு விஜயா பெயருக்கு பதிலாக வேறொரு பெயர் பார்லருக்கு இருப்பதை முத்து பார்த்துவிடுகிறாரா என தெரியவில்லை.
வீட்டிற்கு வரும் ரோஹினியை பார்த்து முத்து அண்ணாமலையிடம் எவ்வளவு பெரிய உண்மையை மறைத்துவிட்டார் என புரொமோவில் கூறுகிறார். அப்படி என்ன முத்து பார்த்தார் என்ன விஷயம் என்பதை நாளைய எபிசோடில் காண்போம்.