முகேஷ் அம்பானியை பயமுறுத்திய போயிங் விமானம்.. என்ன நடந்தது..?!

அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த ஒரு விமானம் வெள்ளிக்கிழமை 174 பயணிகளுடன் பறந்து கொண்டிருந்த வேளையிலேயே அதன் கதவு திடீரென உடைந்து நடுவானில் இருக்கும்போதே வெளியே பறந்துள்ளது, இதனுடன் அடுத்த சில நொடியில் ஒரு இருக்கையும் உடைந்து வெளியே பறந்து.

இதைத்தொடர்ந்து உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு இருந்த பணிகளும், 6 பணியாளர்களும், அமெரிக்காவின் போர்ட்லேண்ட் விமான நிலையத்தில் அவசரமாக விமானத் தரையிறக்கப்பட்டது. இந்த விமானம் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட போயிங் 737-9 Max ரகமாகும்.

இதே போயிங் 737-9 Max ரக விமானத்தைத் தான் முகேஷ் அம்பானி-யின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பயன்படுத்தி வருகிறது என ஈடி பத்திரிக்கை தெரிவித்துள்ளது. ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி மட்டுமே இந்தியாவில் போயிங் 737-9 Max ரக விமானத்தைக் கார்பரேட் ஜெட் ஆகப் பயன்படுத்தி வருகிறார் என்பது கூடுதல் சிறப்பு.

முகேஷ் அம்பானி-யின் போயிங் 737-9 Max ரக விமான T7-LOTUS என்ற பெயரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உள்ளது, இந்த விமானம் ரிலையன்ஸ் லோகோ உடன் பெயின்டிங் செய்யப்பட்டது. ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தங்களுடைய போயிங் விமானத்தைக் குறித்து இதுவரையில் எவ்விதமான கருத்தையும் தெரிவிக்கவில்லை. கடந்த ஆண்டுத் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தனது கார்ப்ரேட் போக்குவரத்தில் போயிங் 737-9 Max விமானத்தைச் சேர்த்தது.

ரிலையன்ஸ் நிறுவனத்திடம் Embraer SA ERJ 145 மற்றும் Airbus SE A319 ஆகிய இரு விமானங்களும், Dauphin மற்றும் Sikorsky ரக ஹெலிகாப்படர்களும் உள்ளது. போயிங் 737-9 Max ரக விமானத்தை அதிகளவில் வைத்துள்ள நிறுவனங்களில் அலாஸ்கா ஏர், யுனைடெட் ஏர்லையன்ஸ் ஹோல்டிங்க்ஸ், பனாமா கோபா ஏர்லைன்ஸ், ஃப்ளைதுபாய், ஏரோமெக்சிகோ, ஏர் டான்சானியா ஆகியவை வைத்துள்ளது.

இதேபோல் இந்தியாவில் போயிங் 737-9 Max மற்றும் போயிங் 737-8 Max ரக விமானங்களை வைத்திருக்கும் இந்திய நிறுவனங்களை உடனடியாகச் செக் செய்துவிட்டு அறிக்கை கொடுக்கும் படி அலாஸ்கா சம்பவத்திற்குப் பின்பு இந்திய சிவில் ஏவியேஷன் அமைப்பு தெரிவித்துள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *