அடிபட்ட சிங்கத்தோட மூச்சுக்காத்து கர்ஜனைய விட பயங்கரமா இருக்கும்… மீண்டு வரும் முனைப்பில் ஹீரோ ஸ்பிளெண்டர்!

இந்திய சந்தையில் நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பைக்குகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,65,588 இருந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 2,50,786 ஆக சரிந்துள்ளது.

இருப்பினும் ஹீரோ ஸ்பிளெண்டர் முதல் இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இந்த பட்டியலில் (Honda Shine), 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,14,960 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,55,943 ஆக உயர்ந்துள்ளது.

இந்த பட்டியலில் பஜாஜ் பல்சர் (Bajaj Pulsar) 3வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 72,735 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,30,403 ஆக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) 4வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 65,074 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 1,16,421 ஆக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina), 5வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 33,702 பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்தன.

இந்த எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 60,607 ஆக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache) 6வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 27,122 ஆக இருந்த டிவிஎஸ் அப்பாச்சி பைக்கின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 41,025 ஆக உயர்ந்துள்ளது.

இந்த பட்டியலில் டிவிஎஸ் ரைடர் (TVS Raider), 7வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 26,997 ஆக இருந்த டிவிஎஸ் ரைடர் பைக்கின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 39,829 ஆக உயர்ந்துள்ளது. இந்த பட்டியலில் ஹீரோ பேஷன் (Hero Passion) பைக், 8வது இடத்தை பிடித்துள்ளது.

கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 2,740 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 34,750 ஆக உயர்ந்துள்ளது. இது விற்பனையில் ஏற்பட்டுள்ள மிகவும் பிரம்மாண்டமான வளர்ச்சி என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.

இந்த பட்டியலில் ராயல் என்பீல்டு கிளாசிக் 350 (RE Classic 350) பைக், 9வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் 26,702 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 30,264 ஆக உயர்ந்துள்ளது.

இந்த பட்டியலில் 10வது மற்றும் கடைசி இடத்தை ஹீரோ கிளாமர் (Hero Glamour) பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு நவம்பர் மாதம் வெறும் 7,402 ஆக இருந்த இந்த பைக்கின் விற்பனை எண்ணிக்கை, நடப்பு 2023ம் ஆண்டு நவம்பர் மாதம் 20,926 ஆக உயர்ந்துள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்த பட்டியலில் ஹீரோ ஸ்பிளெண்டர் தவிர மற்ற அனைத்து பைக்குகளுமே விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளன. ஆனால் ஹீரோ ஸ்பிளெண்டர் ஒவ்வொரு மாதமும் மிகப்பெரிய விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகிறது என்பதை நாம் இங்கே நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே அதனுடைய சரிவு என்பது சாதாரணமான ஒரு விஷயம்தான். எனினும் வரும் மாதங்களில் ஹீரோ ஸ்பிளெண்டர் பைக், விற்பனையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவில் இருந்து மீண்டு வரும் என நாங்கள் கருதுகிறோம். புத்தாண்டில் நிறைய பேர் பைக்குகளை வாங்குவார்கள் என்பதால், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக், இந்த சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *