திருமணமானதும் மனைவியின் முன்னாள் கணவரை அழைத்து வந்த புதுமாப்பிள்ளை! காரணம் என்ன?
திருமணமான உடனே மணப்பெண்ணை மட்டுமின்றி அவரது முன்னாள் கணவரையும் தனது வீட்டிற்கு அழைத்து வந்து மாப்பிள்ளை அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
மனைவியின் முன்னாள் கணவர்
பொதுவாக திருமணம் முடிந்தும் புதுப்பெண்ணை மணமகன் வீட்டிற்கு அழைத்து வருவார்கள். ஆனால் இங்கு அவரது முன்னாள ் கணவரையும் அழைத்து வந்துள்ளார் புதுமாப்பிள்ளை.
கிரிஸ் என்ற 36 வயது பெண், முதல் கணவரிடம் விவாகரத்து பெற்ற நிலையில், 2-வதாக ஜேம்ஸ் ஆர்ம்ஸ்டராங் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
ஆனால் திருமணம் செய்து கொள்ளும் முன்பாகவே ஜேம்ஸ் ஆர்ம்ஸ்ட்ராங்கிடம் கிறிஸ் கண்டிஷன் ஒன்றையும் போட்டுள்ளார்.
அதாவது, திருமணம் முடிந்த பின்பு தனது குழந்தை பருவ நண்பரும் முன்னாள் கணவருமான பிரண்டன் என்பவரையும் தன்னுடன் அழைத்து வருவேன் என்பது தான் அந்த கண்டிஷன் ஆகும்.
மனைவியின் கண்டிஷனுக்கு ஆர்ம்ஸ்ராங்கும் சம்மதம் தெரிவித்ததுடன், திருமணம் முடிந்ததும் அவரது முன்னாள் கணவரையும் அழைத்து வந்துள்ளார்.
இதற்கு பின்னே இருக்கும் காரணம் தான் அனைவரையும் கண்கலங்க வைத்துள்ளது. ஆம் கடந்த 2006ம் ஆண்டு கிறிஸ்க்கும் அவரது நண்பரான பிரண்டனுக்கும் திருமணம் நடைபெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கையில், ஒரு நாள் பிரண்டன் கார் விபத்தில் சிக்கியுள்ளார்.
இந்த விபத்தினால் மனநலம் பாதிக்கப்பட்டதால், ஆரம்பத்தில் அவருடனேயே வாழ்க்கை கழித்துவிட நினைத்துள்ளார். ஆனால் நாளடைவில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள எண்ணம் வந்த நிலையில், பிரண்டனை விட்டுவர மனமில்லாமல், விவாகரத்து செய்துவிட்டு சட்டப்பூர்வமாக அவருக்கு பாதுகாவலாக இருக்க முடிவு செய்துள்ளார்.
பின்பு ஜேம்ஸ் உடன் காதல் ஏற்பட்டு தற்போது திருமணம் செய்து கொண்ட நிலையில், தனது முன்னாள் கணவரையும் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.
மனைவியின் முன்னாள் கணவரை அழைத்து வந்த புதுமாப்பிள்ளைக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.