மக்களுக்காக ரூ.8.30 லட்சம் கோடியை நன்கொடையாக கொடுத்த தொழிலதிபர்.. ஒரு இந்தியர்..!!
பணம் படைத்த மனிதருக்கு குணம் இருக்காது, குணம் படைத்த மனிதரிடம் பணம் இருக்காது என்பார்கள். ஆனால் அதெற்கெல்லாம் மாறாக தான் சம்பாதித்த ரூ.8,29,734 கோடியை பல நல்ல காரியங்களுக்காக தானம் தந்த புண்ணியவானும் இருந்துள்ளார்.
அதுவும் அவர் ஓர் இந்தியர்.டாடா நிறுவனத்தின் நிறுவனர் தான் அவர், பெயர் ஜாம்ஷெட்ஜி டாடா.ஈடெல் பவுண்டேஷன் மற்றும் ஹுருன் நிறுவனத்தின் 2021 ஆம் ஆண்டு அறிக்கையின்படி கடந்த நூற்றாண்டில் மிகப் பெரிய நன்கொடையாளராக ஜாம்ஷெட்ஜி டாடா இருந்துள்ளார். இரண்டாவது இடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் உள்ளார். கல்வி மற்றும் மருத்துவச் செலவுகளுக்காக தனது பெரும்பான்மை நன்கொடைகளை ஜாம்ஷெட்ஜி டாடா அளித்துள்ளார். 1892 ஆம் ஆண்டில் டாடா தனது அறப்பணியைத் தொடங்கியுள்ளார், 1904 ஆம் ஆண்டில் அவர் காலமானார்.அதன்பின்னர் டாடா குரூப் தலைவரான ரத்தன் டாடா இப்போது அறக்கொடைகளை கவனித்து வருகிறார்.ஹென்றி ஃபோர்டின் மகனால் அமைக்கப்பட்ட ஃபோர்டு அறக்கட்டளையின் கதை போன்று பல நன்கொடையாளர்களின் முதல் தலைமுறையை விட இரண்டாவது தலைமுறையினர் அதிகளவு நன்கொடை அளித்தனர் என்று ஹுருன் அறிக்கையின் தலைவரும் தலைமை ஆராய்ச்சியாளருமான ரூபர்ட் ஹூக்வெர்ஃப் கூறினார்.டாடாவைத் தவிர, டாப் 50 உலகளாவிய நன்கொடையாளர்கள் பட்டியலில் இடம்பிடித்த ஒரே இந்தியர் விப்ரோ நிறுவனர் அசிம் பிரேம்ஜி, இவர் சுமார் 22 பில்லியன் டாலர் நன்கொடை அளித்தார். ஜாம்ஷெட்ஜி டாடாவின் மறைவுக்குப் பின் டாடா குரூப்பின் நன்கொடை பணிகளை ரத்தன் டாடா நிர்வகித்து வருகிறார்.ஜாம்ஷெட்ஜி டாடா குஜராத்தின் ஜொராஸ்டிரியன் பார்ஸி குடும்பத்தில் பிறந்தவர். அந்த நேரத்தில் அவரது குடும்ப நிதி நிலைமை அவ்வளவு சிறப்பாக இல்லை. கிட்டத்தட்ட வறுமையால் வாடினர். ஜாம்செட்ஜி டாடா தனது குடும்பத்தின் பூசாரித்துவ பாரம்பரியத்தை உடைத்து, தொழில் தொடங்கும் முதல் குடும்ப உறுப்பினர் ஆனார்.ஜாம்செட்ஜி டாடா ஹீராபோ டாபூவை மணந்தார், அவர்களுக்கு டோராப்ஜி டாடா மற்றும் ரத்தன்ஜி டாடா என்ற இரு மகன்கள் பிறந்தனர், இவர் ஜாம்செட்ஜி டாடாவுக்கு பின்னர் அவர்கள் வணிகத்தை எடுத்துக் கொண்டனர்.டாடா சன்ஸ், டாடா மோட்டார்ஸ் உள்பட டாடா குரூப்பின் அனைத்து நிறுவனங்களையும் நிர்வகித்து வரும் ரத்தன் டாடாவின் இப்போதைய நிகர சொத்து மதிப்பு சுமார் ரூ.3800 கோடியாகும்.இந்திய டாப் கோடீஸ்வரர்களான கௌதம் அதானி, முகேஷ் அம்பானியை விட அதிகளவு வருவாய் பெற்று வரும் போதிலும் அதில் 66 சதவீதத்தை டாடா குரூப் அறச்செயல்களுக்காகவே செலவிட்டு வருகிறது. லாபம் அதன் நோக்கம் அல்ல. நல்ல மனம் படைத்த தலைவரான ரத்தன் டாடாவின் கீழ் அறக்கொடைகள் சிறப்பாகச் செய்யப்பட்டு வருகின்றன.