கேப்டன் மில்லர் கதை என்னுடையது.. எதிர்நீச்சல் வேல ராமமூர்த்தி பரபரப்பு புகார்!
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தின் கதை தன்னுடையது என எதிர்நீச்சல் சீரியல் நடிகர் வேலராமமூர்த்தி புகார் அளித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் பல சர்ச்சைகளை தாண்டி கடந்த 12ஆம் தேதி வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்தை அருண் மாதேஷ்வரன் இயக்கி உள்ளார். கிராமத்தில் உள்ள ஜாதி கொடுமைகளை வெறுத்து ஆங்கிலேய ராணுவத்தில் சேருகிறார் தனுஷ்.பிரிட்டிஷ் ராணுவம் தனது மக்களையே தன்னை வைத்து கொல்ல வைப்பதை பார்த்து வெறுப்படையும் தனுஷ் போராளியாக மாறி ஆங்கிலேய அரசை எதிர்க்கிறார்.இதனால் ஜமீன்தாரும், பிரிட்டிஷ் அரசும் தனுஸை ஒழிக்க நினைக்கிறது. இறுதியில் வெல்வது யார் என்பதுதான் கதை.
எத்தனை குண்டுகள் பாய்ந்தாலும் ஹீரோ மீது ஒரு குண்டு கூட விழாமல் தப்பிப்பது, ஹீரோ அனைவரையும் அடித்து வீழ்த்துவது என பல மாஸ் ஹீரோ படங்களின் காட்சிகளை பஞ்சமில்லாமல் வைத்துள்ளார் அருண் மாதேஷ்வரன். சுதந்திரத்திற்கு முந்தையை இந்தியா, பிரிட்டிஷ் என சில பிளேவர்களை தூவி உள்ளார்.
சிவராஜ் குமார் -தனுஷ் நடிக்கும் காட்சி இந்தியர்களை சுட்டு கொல்லும் காட்சி போன்ற சில காட்சிகள் நன்றாக படாமக்க பட்டுள்ளன. ஜி. வி பிரகாஷ் பழங்குடியினர் இசையை பல இடங்களில் பயன்படுத்தியுளளார்.
இப்படம் தற்போது உலக அளவில் ரூ.65 கோடியைக் கடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனிடையே தெலுங்கு பதிப்பு வருகிற 26ஆம் தேதி வெளியாகிறது. அதற்கான பணிகளில் படக்குழு ஈடுபட்டுவந்த சூழலில், எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி, தான் எழுதிய பட்டத்து யானை நாவலைத் திருடி, கேப்டன் மில்லர் படத்தை எடுத்துள்ளதாகச் சில தினங்களுக்கு முன்பு கூறினார். மேலும் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் முறையிடப்போவதாகத் தெரிவித்திருந்தார்.
அதன்படி தற்போது, தமிழ்நாடு எழுத்தாளர் சங்கத்தில் தனது நாவலை வைத்து கேப்டன் மில்லர் படம் எடுக்கப்பட்டுள்ளதாகப் புகார் கொடுத்துள்ளார். மேலும் பட்டத்து யானை நாவலை சங்கத்தில் ஒப்படைத்துள்ளார். எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து உயிரிழந்த பிறகு, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருவது குறிப்பிடத்தக்கது.