இந்தியாவே காத்துக்கிடந்த கார் அறிமுகமானது! டாடா பஞ்ச். இவி காரின் விலை இவ்வளவு கம்மிதானா?

டாடா நிறுவனம் தனது பஞ்ச் காரின் எலெக்டரிக் வெர்னாக பஞ்ச்.இவி காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. மக்கள் மத்தியில் நீண்ட ஆண்டுகளாக எதிர்பார்க்கப்பட்ட இந்த கார் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிமுகுமாகியுள்ளது. இந்தியாவில் டாடா நிறுவனம் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் சிறப்பாக முன்னேறி வரும் நிலையில் இந்த கார் அதை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நிறுவனம் சமீப காலமாக சிறந்த கார்களை தயாரித்து இந்திய மார்கெட்டில் விற்பனைக்கு கொண்டு வருகிறது. இப்படியாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பஞ்ச் என்ற கார் முதன் முறையாக விற்பனைக்கு வந்தது. இந்த கார் அறிமுகமான போதே இந்த மீதான மோகம் மக்கள் மத்தியில் அதிகமாகவிட்டது. பலர் இந்த காரை வாங்க வேண்டும் என முடிவு செய்து விட்டனர்.

இந்நிலையில் இந்த கார் மைக்ரோ எஸ்யூவி செக்மென்டில் சிறப்பாக விற்பனையாகி வரும் காராக இருக்கிறது. இந்நிலையில் டாடா நிறுவனம் இந்த காரின் எலெக்டரிக் வெர்ஷனை உருவாக்க தீவிரமாக முயற்சி செய்தது. இதையடுத்து பல்வேறு ஆய்வுகளை செய்து பஞ்ச்.இவி காரை தயாரித்துள்ளது. இந்த காரை அந்நிறுவனம் தனது டாடா.இவி பிராண்டில் கீழ் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

டாடா நிறுவனம் இந்த பஞ்ச்.இவி காரை ஆக்டிவ்.இவி பிளாட்ஃபார்மில் உருவாக்கியுள்ளது. இந்த கார் பார்க்க பஞ்ச் கம்பஷன் இன்ஜின் கார் போல இருந்தாலும் பல்வேறு புதிய அப்டேட்கள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக எலெக்ட்ரிக் கார் என்ற காரணத்திற்காக பல ஹைலைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார் ஸ்மார்ட், ஸ்மார்ட் +, அட்வெஞ்சர், எம்பவர்டு மற்றும் எம்பவர்டு+ ஆகிய வேரியன்ட்களில் விற்பனைக்கு வருகிறது. எம்பவர்டு+ வேரியன்ட் டாப் வேரியன்டாக உள்ளது.

இந்த காரில் லாங் ரேஞ்ச், மற்றும் ஷார்ட் ரேஞ்ச் என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் இருக்கின்றன. அட்வெஞ்சர், எம்பவர்டு, மற்றும் எம்பவர்டு + வேரியன்ட்களில் மட்டுமே இந்த லாங் ரேஞ்ச் பேட்டரி ஆப்ஷன் இருக்கிறது. இதை பற்றி பார்ப்பதற்கு முன்னால் இந்த காரின் டிசைன் குறித்த விபரங்களை எல்லாம் பார்த்துவிடலாம்.

பஞ்ச்.இவி கார் தான் ஆக்டிவ். இவி பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட முதல் காராகும். இந்த கார் மார்டனான லுக்கில் உருவாக்கப்பட்டுள்ளது. முன்பக்கம் முழு காரும் கவர் ஆகும்படி டிஆர்எல் வழங்கப்பட்டுள்ளன. பம்பர் அருகே ஏர் இன்டேக் பகுதி இருக்கிறது.இது பேட்டரி மற்றும் மோட்டாருக்கு தேவையான குறைவான காற்றை வழங்க உறுதி செய்கிறது. பஞ்ச் பெட்ரோல் காரை போல இந்த காரின் முக்க பக்க லுக் மக்களை கவரும் வகையில் உள்ளது.

இந்த காரின் உட்புறத்தில் கேபின் அமைப்பு ஒட்டு மொத்த பஞ்ச்.இவி காரின் ஃபீலை மாற்றும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முக்கிமாக உட்புறம் 10.23 இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே ஆகியன உள்ளது. இதுபோக இந்த காரில் வயர்லெஸ் சார்ஜர், சன்ரூஃப், எல்இடி ஹெட்லைட் ஆகிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

இது போக இந்த காரின் 2 ஸ்போர்க் ஸ்டியரிங் வீல் உள்ளது. அதன் நடுவே இலுமினேட் செய்யப்பட்ட டாடா லோகோ உள்ளது. டிரைவருக்கான இன்ஸ்ட்ரூமெண்ட் கிஸ்டரும் டிஜிட்டலாக வழங்கப்பட்டுள்ளன. காரின் உட்புறம் முழுவதும் பிரிமியமான அப்ஹோல்சரி ஆப்ஷனில் வழங்கப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தத்தில் இந்த கார் பஞ்ச் பெட்ரோல் காரிலிருந்த உட்புறத்தில் ஏகப்பட்ட வித்தியாசமான அம்சங்களை பெற்றுள்ளதாக இருக்கிறது.

டாடா பஞ்ச் இவி காரின் பேட்டரி ஆப்ஷன்களை பொருத்தவரை ஷார்ட் ரேஞ்ச் பேட்டரிக்காக 25 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மற்றும் முன்னரே சொன்ன 3 வேரியன்ட்களில் மட்டும் லாங் ரேஞ்ச் பேட்டரி ஆப்ஷன் இருக்கிறது. அதன்படி இதில் 35 கிலோ வாட் ஹவர் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஷார்ட் ரேஞ்ச் கார்கள் 315கி.மீ ரேஞ்சையும், லாங் ரேஞ்ச் கார்கள் 421கி.மீ ரேஞ்சையும் வழங்கும் திறன் கொண்டதாக உள்ளது.

இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 3.3 கிலோ வாட் ஹவர் வால் பாக்ஸ் சார்ஜர் வழங்கப்படுகிறது. மேலும் லாங் ரேஞ்ச் வேரியன்டிற்கு பிரத்தியேகமாக 7.2கிலோ வாட் சார்ஜர் வழங்கப்படுகிறது. இதை தனியாக தான் வாங்க வேண்டும். இதில் சன்ரூஃப் தேவை என்றால் கூடுதலாக ரூ50 ஆயிரம் கொடுக்க வேண்டும். இந்த காரின் பாதுகாப்புஅம்சங்களாக 6 ஏர்பேக், ஏபிஎஸ், இஎஸ்சி, இஎஸ்பி, க்ரூஸ் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஆகியன உள்ளன.

இந்த காரின் விலையை பொருத்தவரை ஸ்மார்ட் வேரியன்ட் ரூ10.99 லட்சம் என்ற விலையிலும், ஸ்மார்ட் + வேரியன்ட் ரூ11.49 லட்சம் என்ற விலையிலும், அட்வெஞ்சர் வேரியன்ட் ரூ11.99 லட்சம் என்ற விலையிலும், இதன் லாங் ரேஞ்ச் வெர்ஷன் ரூ12.99 லட்சம் என்ற விலையிலும், விற்பனையாகிறது.

எம்பவர்டு வேரியன்ட் ரூ12.79 லட்சம் என்ற விலையிலும், இதன் லாங் ரேஞ்ச் வேரியன்ட் ரூ13.90 லட்சம் என்ற விலையிலும், எம்பவர்டு + வேரியன்ட் ரூ13.29 லட்சம் என்ற விலையிலும், இதன் லாங் ரேஞ்ச் வெர்ஷன் 14.49 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது. இது எல்லாம் எக்ஸ் ஷோரூம் விலை தான்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *