இன்ஸ்பெக்டர் சீட்டில் அமர்ந்து கொண்டு சேட்டை செய்த பூனை.. இணையத்தில் வைரலாகும் கியூட் வீடியோ!
கண்டிப்பும், கட்டுப்பாடும் நிறைந்த மும்பை காவல் துறையினரின் சமூக வலைதள பக்கங்கள் மட்டும் எப்போதுமே சுவாரயஸ்யமான தகவல்களால் நிரம்பியிருக்கும். தற்போதுஅது போன்ற ஒரு வீடியோ தான் பதிவிடப்பட்டுள்ளது. எப்போதுமே கடுமையான விசாரணைகள், பரபரப்பு என்று இருக்கக் கூடிய காவல் நிலையத்தில் அவ்வபோது குதூகலமான விஷயங்களும் நடைபெறுவது உண்டு என்பதற்கு சாட்சியாக இது அமைந்துள்ளது.
மூத்த காவல் ஆய்வாளர் சுதிர் எஸ் குதல்கர் இன்ஸ்டாகிராம் தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில், கருப்பு வெள்ளை நிறத்தில் காவல் ஆய்வாளரின் சேரில் அமர்ந்திருக்கும் பூனையின் சேட்டைகள் இடம்பெற்றுள்ளன. அதில், அந்த பூனை இந்த காவல் ஆய்வாளருடைய இருக்கையில் சென்று சொகுசாக அமர்ந்து கொள்கிறது.
காவல் நிலையத்தில் நிலவுகின்ற அன்றாட பரபரப்புகளுக்கு மத்தியில் அந்த பூனை அசந்து தூங்கிக் கொண்டிருக்கிறது. அப்போது காவல் ஆய்வாளர் லாவகமாக தன்னுடைய இருக்கையை பிடிக்க முயற்சி செய்கிறார். ஆனாலும் அந்தப் பூனை எழுந்து செல்ல மறுத்ததுடன், குட்டி தூக்கம் போடுகிறது. இன்ஸ்டாவில் இந்த வீடியோ பதிவிடப்பட்டதும் வைரலாக தொடங்கியது. சுமார் 5.74 லட்சம் பார்வைகளை இந்த வீடியோ பெற்றது. எல்லோரும் பூனையின் மீது அளவுகடந்த அன்பை வெளிப்படுத்தி தங்கள் கமெண்ட்களை பதிவு செய்தனர்.
மூத்த காவல் ஆய்வாளர் சுதிர் எஸ் குதல்கர் ஒரு விலங்கு நல ஆர்வலர் ஆவார். இதற்கு முன்பும், அவர் விலங்குகளுடன் கொஞ்சி விளையாடுவது போன்ற பல வீடியோக்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.
View this post on Instagram
வளர்ப்பு பிராணிகளிடம் கவனம் தேவை :
நாய், பூனை போன்ற வளர்ப்பு பிராணிகளை வளர்க்கும் போது அதன் நகங்கள் நம்மை கீறி விடாமல் இருக்கும் வகையிலும், அதன் எச்சில் நம் உடல் மீது படாதவாறும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனென்றால் வளர்ப்பு பிராணிகளின் எச்சிலில் நுண்ணுயிர்கள், பாக்டீரியாக்கள் போன்றவை உள்ளன.
நாயின் எச்சில் ஆபத்தானதா :
மனிதர்களுடன் மிக நெருக்கமாக இருக்கின்ற நாய்களின் எச்சிலை மிக உன்னிப்பாக நீங்கள் மைக்ரோஸ்கோப் மூலமாக பார்த்தது உண்டா? நாயின் எச்சில் மற்றும் மூக்கு துவாரம் ஆகிய பகுதிகளில் பாக்டீரியாக்கள் மற்றும் ஒட்டுண்ணிக்கள் ஏராளம் உண்டு. இவை கடுமையான நோய் தொற்றுகளை ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.
சமீபத்தில் டிவிட்டர் என்னும் எக்ஸ் தளத்தில் வெளியான வீடியோ இதை உறுதி செய்யும் வகையில் அமைந்துள்ளது. நாய் ஒன்றிடம் கண்ணாடி ஒன்றை கொடுத்து நக்கவிட்டு, பின்னர் அதனை மைக்ரோஸ்கோப் கொண்டு பார்க்கையில் எண்ணிலடங்காத எண்ணிக்கையில் பாக்டீரியா மற்றும் ஒட்டுண்ணிகள் இழைந்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது.
நெட்டிசன்கள் கிண்டல் :
இந்த பதிவை பார்த்து, நாயை கொஞ்சி மகிழ்பவர்களை கிண்டல் செய்யும் வகையில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்தனர். இதுகுறித்து ஒருவருடைய பதிவில், “சந்தையில் கிடைக்கக் கூடிய மிகச் சிறந்த ஆண்டிபயாடிக் மருந்து இதுவாகத்தான் இருக்கும்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.