உயரிய Grammy விருதில் மது ஊற்றி அருந்திய பிரபலம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ
அமெரிக்க ராப் இசைக்கலைஞர் Jay-Z, தனக்கு வழங்கப்பட்ட கிராமி விருது கோப்பையில் மது ஊற்றி அருந்தியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Grammy விருது
லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசையுலகில் உயரிய விருதான Grammy விருது வழங்கும் விழா நடந்தது.
66வது ஆண்டாக நடத்தப்பட்ட இந்த விழாவில், ராப் இசைக்கலைஞர் Jay-Z’க்கு விருது வழங்கப்பட்டது.
இசைத்துறையில் தனிப்பட்ட மற்றும் தொழில்முறை சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு Impact விருது அளிக்கப்பட்டது.
வைரலாகும் வீடியோ
தனக்கு அளிக்கப்பட்ட விருதை Jay-Z தனது மகள் Blue Ivy Carter-ஐ மேடையில் ஏற்றி அவருடன் சேர்ந்து பெற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து விருது பெற்ற மகிழ்ச்சியை Jay-Z தனது நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடினார்.
அப்போது அவர் விருது கோப்பையில் மதுவை ஊற்றி அருந்தினார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.