புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கான வரியை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு..!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் உள்நாட்டில் உணவு விலை உயர்வைக் கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில், கடந்த 2023- ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு 20% வரி விதித்தது. இந்த நிலையில், இந்த வரி விதிப்பிற்கு முடிவு தேதி அறிவிக்காமல் இருந்த நிலையில் தற்போது வரும் மார்ச் மாதம் 31- ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, உள்நாட்டில் அரிசி தேவையைப் பூர்த்திச் செய்யவும், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் பச்சரிசி, நொய், புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்தது. சர்வதேச அளவிலான அரிசி தேவையில் இந்தியாவின் பங்களிப்பு 40% ஆக இருக்கும் நிலையில், ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகளால் பல நாடுகளில் உணவுப்பாற்றாக்குறை ஏற்படும் சூழல் நிலவியது.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி மீண்டும் ஆட்சியமைக்க விரும்புகிறது. ஆனால் விலைவாசி உயர்வு அதற்குப் பெரும் தலைவலியாக அமையலாம் என்று கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *