கப்பல் மாதிரியான காருக்கு அஸ்திவாரம் போட்ட சீன நிறுவனம்.. டாடாவுக்கே சவால் விடுற அளவுக்கு பெரிய ஆளாயிருச்சா!

சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் உலக புகழ்பெற்ற மின்சார கார் உற்பத்தி நிறுவனம் பிஒய்டி (Build Your Dream). இந்த நிறுவனம் இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி அட்டோ3 (Atto3) மற்றும் இ6 (e6) ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார் மாடல்களை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இவற்றின் வரிசையில் மேலும் சில புதிய எலெக்ட்ரிக் கார்களையும் அது இணைக்க இருக்கின்றது. இதன்படி, அடுத்ததாக நிறுவனம் சீல் எனும் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் கொண்டு வரும் என கூறப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சீல் பற்றிய விபரங்களை இந்தியாவிற்கான அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பிஒய்டி சேர்த்திருக்கின்றது.

பிஒய்டீ சீல் (Seal) ஓர் எலெக்ட்ரிக் செடான் ரக காராகும். உலக அளவில் இந்த காருக்கு மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இந்த காரைக் கொண்டு இந்தியர்களையும் கவர சீன நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.

இந்த நிறுவனம் இந்த காரை மட்டுமின்றி இன்னும் சில புதுமுக கார்களையும் நாட்டில் விற்பனைக்குக் களமிறக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், அடுத்ததாக நிறுவனம் அதன் டால்ஃபின் எலெக்ட்ரிக் காரை விற்பனைக்குக் களமிறக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதை உறுதிப்படுத்தக் கூடிய ஓர் தகவலே தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றது.

பிஒய்டி நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் காருக்கு பேடண்ட் பதிவு செய்திருக்கும் தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. ஏற்கனவே நிறுவனத்தின்கீழ் இரண்டு எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இத்துடன் விரைவில் சீல் எனும் செடான் காரும் இணைக்கப்பட இருக்கின்றது. இவ்வாறு இருக்க டால்ஃபின் காருக்கு அது பேடண்ட் பதிவு செய்வதற்கான அவசியம் என்ன என்கிற கேள்வியே பிஒய்டியின் செயல் அமைந்திருக்கின்றது.

இப்போது விற்பனையில் உள்ள பிஒய்டி மின்சார கார்கள் சற்று அதிக விலைக் கொண்டவையாக இருக்கின்றன. ஆனால், பேடண்ட் பதிவு செய்யப்பட்டு இருக்கும் டால்பின் இப்போது விற்பனையில் இருக்கும் கார்களைப் போல் இல்லாமல் அது சற்று மலிவான விலையில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகின்றது.

இதனால்தான் அந்த காருக்கான பேடண்ட் பதிவை பிஒய்டி பதிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகின்றது. உலக சந்தையிலும் இந்த எலெக்ட்ரிக் கார் சற்று குறைவான விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷனிலும் இந்த கார் விற்பனைக்குக் கிடைக்கிறது. 44.9 kWh மற்றும் 60.4 kWh ஆகியவையே அவை ஆகும்.

இதில் முதல் ஒன்றே ஆரம்ப நிலை தேர்வாகும். இது ஓர் முழு சார்ஜில் 340 கிமீ ரேஞ்ஜை தரும். இரண்டாவதாக உள்ள பெரிய பேட்டரி பேக் தேர்வு ஓர் முழு சார்ஜில் 427 கிமீ ரேஞ்ஜை வழங்கும். எல்எஃப்பி பிளேட் வகை பேட்டரி பேக்கே இந்த கார்களில் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த பேட்டரி பேக்குகள் விரைவில் சார்ஜாகும் திறன் கொண்டவை ஆகும். 30 சதவீதத்தில் இருந்து 80 சதவீத சார்ஜை ஏற்ற வெறும் 29 செகண்டுகளே போதுமானது. ஆனால், 100 kW டிசி சார்ஜர் இதற்கு தேவைப்படும். இதுதவிர, 11 kW ஏசி3 பேஸ் சார்ஜர் வாயிலாகவும் இந்த காரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்த அம்சங்களுடன் சேர்த்து விடிஓஎல் அல்லது வெயிக்கிள் டூ லோட் அம்சமும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. அதாவது, இந்த டால்பின் எலெக்ட்ரிக் கார் வாயிலாக வீட்டு மின்சாதன பொருட்களுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், மற்ற எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மின்சாரத்தை இதனால் வழங்க முடியும்.

இத்தகைய சூப்பரான திறன்கள் கொண்ட எலெக்ட்ரிக் காருக்கே பிஒய்டி இந்தியாவில் பேடண்ட் பதிவைச் செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 160 கிமீ ஆகும். மேலும், இதனால் வெறும் 7 செகண்டுகளஇல் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்ட முடியும். இதன் எலெக்ட்ரிக் மோட்டார்கள் 201 பிஎச்பி மற்றும் 290 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டவை என்பது குறிப்பிடத்தகுந்தது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *