சீன ராக்கெட் புறப்பட்ட சில நிமிடங்களிலேயே வெடித்து சிதறியது..!
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து நேற்று முன்தினம் (26.12.2023) லாங் மார்ச் -11 கேரியர் ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.
இந்த செயற்கைக்கோள் ஆனது விண்வெளியில் மேற்கொள்ளப்படும் தொழில்நுட்ப சோதனைகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்டது.
இந்த லாங் மார்ச் -11 ராக்கெட் ஆனது 20.8 மீட்டர் நீளமும், 2 மீட்டர் விட்டமும் கொண்டுள்ளது. இதன் மொத்த எடையானது 58 மெட்ரிக் டன் ஆகும். இந்த ராக்கெட் பூமியில் இருந்து குறைந்த புவி சுற்றுப்பாதை அல்லது சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதைக்கு செயற்கைக் கோளை கொண்டு செல்லும் திறன் பெற்றது ஆகும்.
கடந்த புதன் கிழமை இந்த லாங் மார்ச் -11 ராக்கெட் சீனாவில் உள்ள ஜிசாங் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து ஏவப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ராக்கெட் திசைமாறி விண்ணில் இருந்து பூமியை நோக்கி வந்தது.
லாங் மார்ச் -11 ராக்கெட் அடர்ந்த காட்டுப்பகுதியில் விழுந்து வெடித்து சிதறியது. இதன் காரணமாக அந்த இடமே தீ பிழம்பு ஏற்பட்டது. காட்டுப் பகுதியில் விழுந்ததால் பெரும் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய தொடங்கியுள்ளனர்.