மாலத்தீவை நோக்கி வரும் சீன கப்பல்.. இந்திய பெருங்கடலில் நிலை நிறுத்த போவதாக தகவல்..!
எக்ஸ் பக்கத்தில் கடற்கரையில் அமர்ந்திருக்கும் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
இதையடுத்து சமூக வலைதளங்களில் தீ பரவியது. பலர் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். குறிப்பாக மாலத்தீவைச் சேர்ந்தவர்கள், தங்களுக்குப் போட்டியாக லட்சத்தீவுகளை மேம்படுத்த பிரதமர் மோடி முக்கியத்துவம் அளித்து வருவதாகக் கூறி வந்தனர். ஒரு சிலர் லட்சத்தீவுகள் தங்களுக்கு சொந்தமானது என்று கூறினர்.
இந்த பிரச்சனைகளுக்கு மத்தியில், மாலத்தீவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமது முய்சு கடந்த ஆண்டு சீனாவுக்கு சென்று வந்தார். அங்கு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையிலான உறவு சரியானதாக இல்லை என்பதையும், மாலத்தீவுகள் சீனாவுடன் நெருங்கி வருவதையும் இந்த சந்திப்பு உறுதி செய்தது.
இந்நிலையில்தான் மாலத்தீவு கடல் பகுதியை நோக்கி சீன ஆராய்ச்சிக் கப்பல் வருவது தெரிய வந்துள்ளது. இந்தக் கப்பல் ராணுவக் கப்பலாக இல்லாவிட்டாலும், இந்தியாவைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்தியாவின் ராணுவ ரகசியங்கள் குறித்த ஆராய்ச்சியில் சீனா ஈடுபடலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.