வரும் 14ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..!
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ஆண்டு தோறும் மாசி மாத பெருவிழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம்.வரும் மார்ச் 8 தேதி மாசி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதை முன்னிட்டுஅனைத்து துறை அலுவலர்களுடன் மாசி பெருவிழா முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மேல்மலையனூரில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் டாக்டர் பழனி கலந்து கொண்டு அங்காளம்மன் கோவில் மாசி பெருவிழாவிற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகள் குறித்துஆலோசனை நடத்தினார்.
கூட்டத்தில் மார்ச் 8 ஆம் தேதி கொடியேற்ற விழா, 9ஆம் தேதி மயான கொள்ளை விழா,மார்ச் 12 ஆம் தேதி தீமிதி விழாவும், மார்ச் 14 திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது .
மேலும் மார்ச் 14ஆம் தேதி திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுவதால் அன்று விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாகவும் இந்த விடுமுறையை ஈடு செய்வதற்கு மார்ச்23 -ஆம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என மாவட்ட ஆட்சியர் பழனி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.